என் மலர்

  செய்திகள்

  நெல்லையில் திருமணத்திற்கு முன் தாயான நர்சிங் கல்லூரி மாணவி
  X

  நெல்லையில் திருமணத்திற்கு முன் தாயான நர்சிங் கல்லூரி மாணவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணத்திற்கு முன் கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்து இறந்திருப்பது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் சிங்கை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் நர்சிங் கல்லூயில் படித்து வருகிறார். அப்போது அவருக்கும் அவரது உறவினரின் மகனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அடிக்கடி காதலர்கள் தனிமையில் சந்தித்து பேசினர். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

  இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியின் காதலர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். மாணவி கர்ப்பமான தகவல் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் கூடி மாணவியை அந்த காதலனுக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அந்த வாலிபரை ஊருக்கு வருமாறு அழைத்தனர்.

  ஆனால் அந்த வாலிபர் நான் வருவதற்கு சில மாதங்கள் ஆகும். வந்த பின்னர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து சிங்கையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

  திருமணத்திற்கு முன்பு மகளுக்கு குழந்தை பிறந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதிய அவரது பெற்றோர், பிறந்த குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்க்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று அந்த பச்சிளம் குழந்தையை எடுத்து கொண்டு ஒரு ஆசிரமத்திற்கு சென்று கொடுக்க முயன்றனர்.

  அப்போது ஆசிரம நிர்வாகிகள், குழந்தை பசியால் மூச்சு திணறி உயிருக்கு போராடி கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக மருத்துவமனையில் அனுமதியுங்கள் என்று கூறினர். இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய டாக்டர்கள் கூறினர்.

  இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  Next Story
  ×