என் மலர்

  செய்திகள்

  டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
  X

  டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கும்பகோணம்:

  டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் ஆறு, ஏரி, குளங்கள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

  குறிப்பாக விவசாயிகள் கோடை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்புக்கு சாத்தியம் இல்லாததால் டெல்டா விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

  இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு வருவதால் மக்கள், காலி குடங்களுடன் ரோட்டுக்கு வந்து போராடும் நிலை இருந்து வருகிறது.

  தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பேராவூரணி, அதிராம்பட்டினம், பூதலூர், திருவையாறு ஆகிய பகுதிகளிலும், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், வேதாரண்யம் , பொறையாறு ஆகிய இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, குடவாசல், கொரடாச்சேரி, நீடாமங்கலம் ஆகிய இடங்களிலும் கிராம மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியில் நரிக்குடி ஊராட்சி முட்டக்குடி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் மேல்நிலைதேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.

  இதனால் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் கிராம மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆடுதுறை- திருப்பனந்தாள் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இதையடுத்து திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின்பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

  Next Story
  ×