search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும் - அர்ஜூன் சம்பத்
    X

    கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும் - அர்ஜூன் சம்பத்

    கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #ArjunSampath

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் , கைகளில் தென்னங்கன்றுகளுடன் கலந்து கொண்டு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு கொடுத்தார்.

    கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் சேதமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தென்னை மரங்கள் அதிகமாக சேதமானதால் தேங்காய் விலை அதிகமாகும் சூழ்நிலை உள்ளது. இதனை சரிசெய்ய விவசாயிகளுக்கு புதிய தென்னங்கன்றுகளை தமிழக அரசு வழங்க வேண்டும். வீடு மற்றும் விவசாய பயிர் சேதங்களை விரைவாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி கேட்டது. அதனை உடனடியாக மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    அதற்கு முன்பு இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன், டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது, இலவசமாக மண்எண்ணை வழங்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது மக்கள் மண்எண்ணையை அதிகம் பயன்படுத்துவதில்லை. எனவே மக்களுக்கு கியாஸ் அடுப்பு, சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மோடி வந்து பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்களை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ArjunSampath

    Next Story
    ×