search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்னை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன்
    X

    தென்னை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன்

    கஜா புயலால் பாதித்த தென்னை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். #Gajacyclone #GRamakrishnan
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இயற்கை சீற்றத்தை தடுக்க இயலாது. ஆனால் அதனால் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பினை சரி செய்யும் வகையில் மாநில அரசு இதுவரை சரியான நடவடிக்கையோ, நிவாரண உதவியோ வழங்கவில்லை. இன்னும் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.

    தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,100 நிவாரணம் என்பது வருந்தத்தக்கது. எனவே நிவாரணத் தொகையை கூடுதலாக அறிவிக்க வேண்டும். மேலும் விவசாய மற்றும் கல்வி, சுயஉதவிக்குழு கடன்கனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மறுபடியும் தென்னை விவசாயிகள் மரம் வைத்து காய்ப்புக்கு வருவதற்கு 5 ஆண்டு ஆகும். எனவே அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

    மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை. உடனடியாக வீடு இழந்தவர்கள் மற்றும் தென்னை, பயிர்களை இழந்தவர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணங்களை வழங்க மத்திய-மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajacyclone #GRamakrishnan
    Next Story
    ×