search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை மருத்துவக்கல்லூரியில் டெங்கு- பன்றி காய்ச்சலுக்கு 12 பேருக்கு சிகிச்சை
    X

    தஞ்சை மருத்துவக்கல்லூரியில் டெங்கு- பன்றி காய்ச்சலுக்கு 12 பேருக்கு சிகிச்சை

    தஞ்சை மருத்துவக்கல்லூரியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட12 பேர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu #Dengue

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வேகமாக டெங்கு - பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் நாளுக்கு நாள் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு உள்ளாகி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.

    மேலும் டெங்கு - பன்றிக் காய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது பருவமழை தொடங்கிய நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

    எனவே காய்ச்சல் பரவுவதை முற்றிலும் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 1,200 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அது போன்று மாவட்டங்கள் முழுவதும் இதற்காக தனி அதிகாரிகள் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்களை தனி வார்டில் அனுமதித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு என்று வார்டுகள் ஒதுக்கப்பட்டு 24 மணி நேரமும் டாக்டர்கள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு தினமும் ஏராளமானோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று இரவு வரை 87 பேர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தவிர 8 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு தனி வார்டுகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #Swineflu #Dengue

    Next Story
    ×