search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 6ஆயிரத்து 800 கனஅடியாக குறைப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 6ஆயிரத்து 800 கனஅடியாக குறைப்பு

    மேட்டூர் அணையில் இருந்து 14ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 6ஆயிரத்து 800 கனஅடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் அந்த அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 15ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 8ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து 14ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 6ஆயிரத்து 800 கனஅடியாக குறைக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 13ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 10ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஒகனேக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லில் மெயின் அருவி சேதம் அடைந்திருப்பதாக கூறி, அதில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற அருவிகளிலும், காவிரி கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள்.

    வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்படுகிறது. இதனால் உற்சாகமாக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர். #MetturDam
    Next Story
    ×