search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் 500 பேரிடம் ரூ.9 கோடி மோசடி: ஏலச்சீட்டு நிறுவன அதிபர் பேரனுடன் கைது
    X

    கோவையில் 500 பேரிடம் ரூ.9 கோடி மோசடி: ஏலச்சீட்டு நிறுவன அதிபர் பேரனுடன் கைது

    கோவையில் 500 பேரிடம் ரூ.9 கோடி மோசடி செய்தது தொடர்பாக ஏலச்சீட்டு நிறுவன அதிபரையும் அவரது பேரனையும் போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை மதுக்கரையை அடுத்த போடிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 72).

    இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் வேலுசாமி துளசியம்மாள் சிட்ஸ் என்ற ஏலச்சீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி துளசியம்மாள், மகன் கணேசன், மருமகள் இந்திராணி, மகள் சித்ரா, மருமகன் சண்முகம், பேரன் கோகுல்நாத் ஆகியோரும் இந்நிறுவனத்தில் நிர்வாகிகளாக இருந்தனர்.

    போடிபாளையம், சுந்தராபுரம், குனியமுத்தூர், மதுக்கரை, பாலத்துரை ஆகிய ஊர்களை சேர்ந்த 500-க்கும் மேற்படட பொதுமக்கள் ரூ.9 கோடி வரை இந்நிறுவனத்தில் சீட்டுபணம் செலுத்தி இருந்தனர்.

    இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சீட்டு கம்பெனியை மூடி விட்டு சீட்டு போட்டவர்களுக்கு பணம் கொடுக்காமல் தலை மறைவாகி விட்டனர். இது சம்பந்தமாக சவுந்தர்ராஜன் என்பவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    அதில் சீட்டுபணமாக நான் செலுத்திய ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்தை வேலுசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறியிருந்தார்.

    புகாரின்பேரில் வேலுசாமி மற்றும் குடும்பத்தினர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து வேலுசாமி, அவரது பேரன் கோகுல் நாத்(23) ஆகியோரை இன்று கைது செய்தனர்.

    பின்னர் இருவரையும் கோவை டேன்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மோசடி பணத்தில் வேலுசாமி, துளசியம்மாள், சித்ரா, சண்முகம், கணேசன், இந்தி ராணி ஆகியோர் பெயர்களில் அடுக்குமாடி வீடுகள், வீட்டுமனைகள், விவசாய நிலங்கள், கல் உடைக்கும் கிரசர்கள் மற்றும் தங்கநகைகள் வாங்கி இருப்பது தெரிய போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவற்றை பறிமுதல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே வேலுசாமி துளசியம்மாள் சீட்டு நிறுவனத்தில் சீட்டு போட்ட பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள அசல் ஆவணங்களுடன் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கும்படி டி.எஸ்.பி. தம்பித்துரை கூறினார். #tamilnews
    Next Story
    ×