search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் விரைவில் அரசியல் மாற்றம்: சாமிநாதன் எம்.எல்.ஏ. தகவல்
    X

    புதுவையில் விரைவில் அரசியல் மாற்றம்: சாமிநாதன் எம்.எல்.ஏ. தகவல்

    புதுவை மக்கள் மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் விரைவில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    துச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரக்கூடிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

    சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக வரியில்லாத பட்ஜெட்டை மோடி தாக்கல் செய்துள்ளார். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வழி செய்யப் பட்டுள்ளது. ஒரு கோடி வீடு, 8 கோடி பேருக்கு இலவச மின்சாரம், 4 கோடிபேருக்கு கியாஸ் இணைப்பு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 2022ல் புதுவையில் வீடு இல்லாதவர்கள் இல்லாத நிலை உருவாகும். 75 லட்சம் பேருக்கு வேலை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ரெயில்வே துறை நவீன மயமாக்கப்பட்டு அனைத்து நகரமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சியினரும் வரவேற்றுள்ளனர். இது மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

    பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் விரைவில் நிதி மந்திரி, உள்துறை மந்திரியை சந்தித்து பேச உள்ளோம். அப்போது புதுவையின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்றும், திட்டங்களை அளிக்க வேண்டும் என்றும் கேட்க உள்ளோம். காங்கிரஸ் கட்சியை எந்த கொம்பானாலும் அழிக்க முடியாது என நாராயணசாமி கூறி உள்ளார்.

    யாரும் காங்கிரஸ் கட்சியை அழிப்பதாக சொல்லவில்லை. அந்த கட்சி அழிந்துகொண்டிருப்பதால் அவராகவே சொல்லி வருகிறார். கவர்னரையே சந்திக்க மாட்டோம் என பிடிவாதமாக காங்கிரசார் இருந்து வந்தனர். தற்போது அந்த நிலையை மாற்றி கவர்னரை முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் சந்திக்க தொடங்கி உள்ளனர்.

    கவர்னரும் மாநில வளர்ச்சிக்கு உறு துணையாக இருப்பார். புதுவையில் மக்கள் மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புகின்றனர். அதனால் விரைவில் அரசியல் மாற்றம் ஏற்படும்.

    புதுவைக்கு வருகிற 28-ந்தேதி பிரதமர் வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசியல் மாற்றமா? ஆட்சி மாற்றமா? என அவரிடம் கேட்டபோது, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள் என்று கூறினார். பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. சோமசுந்தரம், துணை தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச் செயலாளர் தங்கவிக்ரமன் ஆகியோர் உடனிருந்தனர். #tamilnews

    Next Story
    ×