என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க.வுக்கு இனி அனைத்து தேர்தலிலும் வெற்றி கிடைக்கும்: குமரகுரு எம்.எல்.ஏ. பேட்டி
Byமாலை மலர்24 Nov 2017 3:08 PM GMT (Updated: 24 Nov 2017 3:08 PM GMT)
இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் அ.தி.மு.க.வுக்கு இனி அனைத்து தேர்தலிலும் வெற்றி கிடைக்கும் என்று குமரகுரு எம்.எல்.ஏ. கூறினார்.
திருக்கோவிலூர்:
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. விற்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி திருக்கோவிலூர் வந்திருந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான குமரகுரு நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், பின்னர் தர்மமே வெல்லும் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாரக மந்திரத்திற்கேற்ப தற்போது தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வந்துள்ளது. இது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அ.தி.மு.க. தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை மேலும் உறுதிசெய்துள்ளது. ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நெருங்கி வரும்போது இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது அவரது ஆன்மாவே எங்கள்பக்கம் தான் என்பதை நிரூபிக்கும் வகையில்உள்ளது.
தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னர் அவரது வழியில் அ.தி.மு.க. அரசு எடப்பாடி பழனிச்சாமி தலைமயில் நடைபெற்று வருகின்றது. அந்த அரசுக்கு மக்கள் ஆதரவும் உள்ளது. கட்சி யனரின் ஆதரவும் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பும் அதனையே உறுதி செய்துள்ளது. இது ஒரு மகத்தான நாள் ஆகும். இனி எந்த தேர்தல் வந்தாலும் அதனை அ.தி.மு.க. எதிர் கொள்ளும், உள்ளாட்சியாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அ.தி.மு.க வுக்கு இனி என்றுமே வெற்றிமுகம்தான் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு குமரகுரு எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story
×