என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- முதலில் ஆடிய வங்கதேசம் 178 ரன்கள் எடுத்தது.
- இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் 103 ரன்களுக்கே 6 விக்கெட் இழந்து தடுமாறியது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 தொடரில், இன்று கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
முதலில் ஆடிய வங்கதேசம் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. சோபனா மோஸ்தாரி 60 ரன்கள் அடித்தார்.
இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
179 ரன்கள் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் 103 ரன்களுக்கே 6 விக்கெட் இழந்து தடுமாறியது.
பின்னர், கேப்டன் ஹீதர் நைட் மற்றும் சார்லி டீன் இணை சேர்ந்து, ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் சேர்த்து, இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.
- தோனி, தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு பைலட்டாக சான்றிதழ் பெற்றது எங்களுக்கு ஒரு மகத்தான மைல்கல்.
- அவர் மிகுந்த கவனம் செலுத்தி மிக விரைவாக அதைக் கற்றுக்கொண்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிகாரப்பூர்வமாக டிரோன் பைலட் உரிமம் பெற்று அசத்தியுள்ளார். தோனி தனது சமூக வலைதள பதிவில் இதை அறிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனத்தில் தோனி பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடரும் ஆவார்.
கருடா ஏரோஸ்பேஸ், உற்பத்தி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டிற்குமே DGCA சான்றிதழ்களைப் பெற்ற இந்தியாவின் முதல் டிரோன் ஸ்டார்ட்அப் ஆகும்.
தோனி பயிற்சி மேற்கொண்டது குறித்து கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஸ்வர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், "எங்கள் பிராண்ட் அம்பாசிடரும் முதலீட்டாளருமான எம்.எஸ். தோனி, தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு பைலட்டாக சான்றிதழ் பெற்றது எங்களுக்கு ஒரு மகத்தான மைல்கல்.
அவர் மிகுந்த கவனம் செலுத்தி மிக விரைவாக அதைக் கற்றுக்கொண்டார். டிரோன் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் எங்கள் நோக்கத்தில் அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, எங்கள் முழு அணிக்கும் ஒரு பெரிய ஊக்கமளிக்கிறது. தோனி பாய் ஒரு உத்வேகம்" என்று தெரிவித்தார்.
- காயம் காரணமாக பும்ராவுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கப்படுகிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
பும்ராவின் பணிச்சுமை நிர்வகித்தல் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பும்ராவின் முடிவை ஆதரித்துள்ளார்.
காயம் காரணமாக முக்கியமான போட்டிகளில் மட்டுமே விளையாட பும்ரா முடிவு செய்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுகிறார். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. டி20 தொடரில் மட்டும் விளையாடுகிறார்.
பும்ராவின் பணிச்சுமை நிர்வகித்தல் தொடர்பாக முகமது சிராஜ் கூறியதாவது:-
வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் குறித்து பும்ரா கவலைப்படுவதில்லை. அவருக்கு முதுகுப் பகுதியில் மோசமான காயம் ஏற்பட்டு, மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் பந்து வீசி, காயம் ஏற்பட்டிருந்தால் அதன்பிறகு அவரால் பந்து வீச முடியுமா அல்லது முடியாதா? என்பதை சொல்ல முடியாது. இது மோசமானது.
அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர். ஆசிய கோப்பை தற்போதுதான் முடிவடைந்துள்ளது. அடுத்த வரும் டி20 உலகக் கோப்பை வருகிறது. 2027-ல் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. அவர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்திய ரசிகர்கள் புரிந்து கொள்வது அவசியம். அவர் இந்திய அணியின் முதுகெலும்பு. அணிக்கு விளையாட தயாராக இருக்கும்போதெல்லாம், நாட்டிற்கான சிறப்பாக செயல்பட விரும்புவார். அவர் காயம் அடைந்தால், எப்படி செயல்பட முடியும்?.
இது நுட்பமான சூழ்நிலை. அவருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால், அதில் இருந்து அவரால் குணம் அடைய முடியும். ஆனால், காயத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். ஏனென்றால், ரன்-அப், பவுலிங் ஆக்ஷன் மிகவும் கடினமானது. அதனால், பும்ரா சரியான முடிவை எடுத்துள்ளார் என நினைக்கிறேன்.
இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. கடைசி டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
- இந்த மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
- கிரிக்கெட் மைதானத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் பீகாரில் கட்டப்பட்டுள்ளது.
ராஜ்கிரில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.
இந்த மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,121 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. புனேவிலிருந்து உயர்தர கருப்பு மண்ணைப் பயன்படுத்தி இந்த மைதானத்தின் ஆடுகளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 40,000 இருக்கைகள் உள்ளது.
இந்த மைதான கட்டுமானத்தின் ஆரம்பச் செலவு ரூ.740 கோடியாக மதிப்பிடப்பட்டது, ஆனால் நவீன வசதிகள் மற்றும் கூடுதல் கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டதால் ரூ.1,121 கோடி செலவானது குறிப்பிடத்தக்கது.
- ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
- இதில் இங்கிலாந்தின் நாட் சீவர்-புருன்ட் 731 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.
இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 791 புள்ளிகளுடன் தொடர்ந்து 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக சதங்களை விளாசினார்.
இங்கிலாந்தின் நாட் சீவர்-புருன்ட் 731 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 713 புள்ளியுடன் 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் 4வது இடத்திலும் உள்ளனர்.
பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தில் நீடிக்கிறார். டாப் 10-ல் இடம்பிடித்தவர் இவர் மட்டுமே.
- முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
- 2 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 10 தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்தி இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 10 தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், 2வது டெஸ்ட்டுக்கு முன்பு இந்திய வீரர்களுக்கு விருந்து அளிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியாளர் கம்பீர் இந்திய வீரர்களுக்கு நாளை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இரவு விருந்து அளிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
- ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டிலும் மிட்சேல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை டி20 தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 டி20 தொடரில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அரவிக்கப்ட்டு விட்டது. ஒருநாள் தொடரில் சுப்மன் கில் கேப்டனாகவும் டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டிலும் மிட்சேல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:-
மிட்ச் மார்ஷ் (C), சேவியர் பார்ட்லெட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஓவன், கூப்பர் கோனொலி, மேத்யூ ரென்ஷா, பென் டுவார்ஷுயிஸ், மேட் ஷார்ட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், கேமரான் கிரீன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசல்வுட்,
டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:-
மிட்ச் மார்ஷ் (C) சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா,
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 231 ரன்னில் சுருண்டது.
- நியூசிலாந்து அணி கேப்டன் டிவைன் அதிகபட்சமாக 85 ரன்கள் சேர்த்தார்.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 231 ரன்னில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து கேப்டன் ஷோபி டிவைன் அதிகபட்சமாக 85 ரன்கள் அடித்தார். ப்ரூக் ஹாலிடே 45 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் நோன்குலுலேகோ எம்லாபா 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையான கேப்டன் லாரா வால்வார்த் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து தஸ்மின் பிரிட்ஸ் உடன் சுனே லுஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரிட்ஸ் 89 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மரிசானே காப் (14) அன்னேகே போஸ்ச் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். என்றாலும், சுனே லுஸ் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 40.5 ஓவரில் 234 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 89 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.
- கான்பூரில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஏ அணி விளையாடியது.
- 2ஆவது போட்டியின்போது சில வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா "ஏ" அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நேற்றுடன் அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிக்கான தொடர்கள் முடிவடைந்தன. ஒருநாள் தொடர் கான்பூரில் நடைபெற்றது.
2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்றது. முதல் மற்றும் கடைசி போட்டியில் இந்தியா ஏ வெற்றி பெற்றது.
2ஆவது போட்டியின்போது ஆஸ்திரேலியா ஏ அணி வீரர்கள் சிலருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஹென்றி தோர்ன்டன் உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சரியாகிவிட்டது.
வீரர்களின் உடல் நலக்குறைவுக்கு உணவுதான் காரணம் என ஆஸ்திரேலியா ஏ அணி குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில் பிசிசிஐ துணைத் தலைவரான ராஜீவ் சுக்லா, ஆஸ்திரேலியா ஏ அணியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
உணவுதான் பிரச்சனையாக இருந்திருந்தால் இந்திய வீர்ரகள் உள்பட அனைத்து வீரர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்க வேண்டும். வேறு ஏதாவது இருந்திருக்க வேண்டும். சிறந்த ஓட்டலில் இருந்து அவர்களுக்கு உணவு வரவழைக்கப்பட்டிருந்தது. அனைவரும் அந்த உணவை சாப்பிட்டார்கள். சில வீரர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வேறு ஏதாவது தொற்று (infection) ஏற்பட்டிருக்கலாம்.
அங்கு ஏராளமான ஓட்டல்கள் இல்லை. இதனால் இந்த விசயம் பெரிதாக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு 300 அறைகள் கொண்ட 5 நட்டசத்திர ஓட்டல் தேவை. அதுபோன்ற ஓட்டல் இல்லை. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய சர்வதேச விமான நிலையம் அங்கு இல்லை. சிறந்த ஏற்பாடுகள் இருந்திருந்தால், அவர்களுக்கு பலன் தரக்கூடிய வகையில் இருந்திருக்கும்.
இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
- சுப்மன் கில் டி20 மற்றும் டெஸ்ட் கிரகி்கெட்டின் சிறந்த கேப்டன் என்பதை ஏற்கனவே காண்பித்து விட்டார்.
- ஆகவே, ஒருநாள் கிரிக்கெட்டிலும் எந்த மாறுபாடும் இருக்காது.
இந்திய ஒருநாள் அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் 2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பும் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஆதரித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச்.
சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-
சுப்மன் கில் டி20 மற்றும் டெஸ்ட் கிரகி்கெட்டின் சிறந்த கேப்டன் என்பதை ஏற்கனவே காண்பித்து விட்டார். ஆகவே, ஒருநாள் கிரிக்கெட்டிலும் எந்த மாறுபாடும் இருக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான தொடர் மிகச் சிறந்த தொடராக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவான் என நினைக்கிறேன். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 2-1 எனக் கைப்பற்றும். இருந்தாலும் இதில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இந்தியா சிறந்த அணி. இந்த தொடரை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்றார்.
- ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.
- ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் வருகிற 19-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் 25-ந்தேதி களில் நடக்கிறது.
ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றாலும் கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார். டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2027-ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வு குழு இந்த முடிவை மேற்கொண்டு உள்ளது. அதன் முதல்கட்ட பணியாகத்தான் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே ரோகித் விளையாடி வரும் நிலையில்,
அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்நிலையில், ரோகித் சர்மாவின் பழைய டுவீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு 2012 ஆம் ஆண்டு ரோகித் தனது எக்ஸ் பதிவில், "45 எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்தாமல் 77 எண் கொண்டஜெர்சியை அணிந்து விளையாட போவதாக ரோகித்" தெரிவித்திருந்தார்.
அதன்படி சில காலத்திற்கு 77 ஜெர்சியை அணிந்து ரோகித் விளையாடினார். ஆனால் பின்னர் மீண்டும் 45 எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடிய ரோகித் தற்போது வரை அந்த ஜெர்சியை பயன்படுத்தி வருகிறார்.
தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்ட கில் 77 எண் கொண்ட ஜெர்சியில் விளையாடி வருகிறார். அவ்வகையில் தனக்கு அடுத்து யார் கேப்டனாக ஆகா போகிறார் என்பதை ரோகித் முன்னரே கணித்து விட்டார் என்று இணையத்தில் நெட்டிசன்கள் ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர்.
- ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
- ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அணியில் இடம் பெறுவது கடினமே.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, வீராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட் டுமே விளையாட முடிவு செய்துள்ளனர்.
இருவரையும் ஒருநாள் போட்டிக்கான அணியில் மீண்டும் இடம் பெறுவதில் தேர்வு குழு விருப்பத்துடன் இல்லை என்று கடந்த காலங்களில் தகவல் வெளியானது.
ஆனாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருவரும் தேர்வு பெற்றுள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் வருகிற 19-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் 25-ந்தேதி களில் நடக்கிறது.
ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றாலும் கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார். டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் பதவியை பறித்ததால் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. வீராட் கோலிக்கு இதே நிலைதான்.
2027-ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வு குழு இந்த முடிவை மேற்கொண்டு உள்ளது. அதன் முதல்கட்ட பணியாகத்தான் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அணியில் இடம் பெறுவது கடினமே. அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ.) பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனுபவம் வாய்ந்த இருவரும் 2027 உலக கோப்பை அணிக்கு தேவை என்று கிரிக்கெட் வாரியத்தில் சில உறுப்பினர்கள் கருதுகின்றனர். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை கடந்த மார்ச் மாதம் கைப்பற்றியது. இது குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டது. அதே நேரத்தில் பலர் 2027 உலக கோப்பைக்கு சுப்மன்கில் தலைமையிலான இளம் அணியை தயார்படுத்துவது அவசியம் என்று தெரிவித்தனர். இதனால் பி.சி.சி.ஐ. கூட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
38 வயதான ரோகித் சர்மா 273 ஒருநாள் போட்டி யில் 11,168 ரன் எடுத்து உள்ளார். 32 சதமும், 58 அரை சதமும் அடித்து உள்ளார்.
36 வயதான விராட் கோலி 302 ஒருநாள் போட்டியில் 14,181 ரன் எடுத்துள்ளார். 51 சதமும், 74 அரை சதமும் இதில் அடங்கும்.






