என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் உலகக்கோப்பை: இங்கிலாந்திடம் வீழ்ந்த வங்கதேசம்!
    X

    மகளிர் உலகக்கோப்பை: இங்கிலாந்திடம் வீழ்ந்த வங்கதேசம்!

    • முதலில் ஆடிய வங்கதேசம் 178 ரன்கள் எடுத்தது.
    • இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் 103 ரன்களுக்கே 6 விக்கெட் இழந்து தடுமாறியது.

    ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 தொடரில், இன்று கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

    முதலில் ஆடிய வங்கதேசம் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. சோபனா மோஸ்தாரி 60 ரன்கள் அடித்தார்.

    இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    179 ரன்கள் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் 103 ரன்களுக்கே 6 விக்கெட் இழந்து தடுமாறியது.

    பின்னர், கேப்டன் ஹீதர் நைட் மற்றும் சார்லி டீன் இணை சேர்ந்து, ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் சேர்த்து, இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.

    Next Story
    ×