என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த மேட்ச் தொடங்கும்
    • ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

    இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போட்டிகள் மீண்டும் வரும் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று தொடங்குகின்றன. ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த மேட்ச் தொடங்கும் என கூறப்படுகிறது.

    ப்ளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் இன்னும் 17 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இவை பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய 6 இடங்களில் மட்டுமே நடைபெறும். இதில் எதுவும் சேப்பாக்கத்தில் நடைபெறாது.

    ப்ளே ஆஃப் சுற்று விவரங்கள்:

    குவாலிபையர் 1 - மே 29

    எலிமினேட்டர் - மே 30

    குவாலிபையர் 2 - ஜூன் 1

    இறுதிப் போட்டி - ஜூன் 3 ஆம் தேதி முறையே நடக்க உள்ளது.

    • ராஜஸ்தான் விளையாட்டு குழுவின் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்.
    • பாதுகாப்பு நடவடிக்கையாக மைதானத்தில் இருந்து ஊழியர்கள் வெறியேற்றினர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த வெடிகுண்டு மிரட்டல் ராஜஸ்தான் விளையாட்டு குழுவின் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் இருந்து இ-மெயில் வந்துள்ளது.

    மைதானத்திற்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பதால் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக மைதானத்தில் இருந்து ஊழியர்கள் வெறியேற்றினர்.

    மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    • உங்களின் சாதனைகள், மைல்கல்கள் குறித்துதான் எல்லாரும் பேசுவார்கள்.
    • கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள அளப்பரிய காதல் ஆகியவைதான் எப்போதும் எனது நினைவில் நிலைத்து நிற்கும்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலி ஓய்வுக்கு அவரது மனைவியும் சினிமா நடிகையுமான அனுஷ்கா சர்மா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உங்களின் சாதனைகள், மைல்கல்கள் குறித்துதான் எல்லாரும் பேசுவார்கள். ஆனால் நீங்கள் வெளியே காட்டிக்கொள்ளாத கண்ணீர், யாரும் பார்க்காத போராட்டங்கள், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள அளப்பரிய காதல் ஆகியவைதான் எப்போதும் எனது நினைவில் நிலைத்து நிற்கும்.

    ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு பிறகும், கூடுதல் அடக்கம், ஞானத்துடன் திரும்ப வந்தீர்கள்.. இந்தப் பயணத்தை அருகே இருந்து பார்த்தது எனக்கு கிடைத்த பெருமை என உருக்கமாக பேசியுள்ளார்.

    • கோலியின் தலைமையின் கீழ், இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தது.
    • ஓய்வு பெற்றுள்ள விராட் கோலிக்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் விராட் கோலி. இவர் சச்சினை விட பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசி சச்சினின் நீண்ட நாள் சாதனையை முறியடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

    இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் அறிவித்தார்.

    இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

    மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.

    அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலிக்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில், "சிங்கத்தைப் போன்ற பேரார்வம் கொண்ட ஒரு மனிதன்! உங்களை மிஸ் பண்ணுவேன் சீக்ஸ் …." என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

    கோலியின் தலைமையின் கீழ், இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தது. மேலும் 2018-19 சுற்றுப்பயணத்தின் போது ஆஸ்திரேலியாவில் முதல் தொடரையும் வென்றது குறிப்பிடத்தக்கது. 

    • டெல்லி அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் இந்தியா திரும்பமாட்டார் என்று அறிவித்துவிட்டார்.
    • சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டன.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ந் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி இடையேயான ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து போர் பதற்றம் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டி 1 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இது தொடர்பாக நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    லக்னோ-பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டத்தில் இருந்து போட்டி தொடங்கும். டெல்லி-பஞ்சாப் இடையே பாதியில் ரத்து செய்யப்பட்ட ஆட்டம் மீண்டும் நடைபெறாது என்றும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

    இதனால் எஞ்சிய 12 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டி ஆக மொத்தம் 16 ஆட்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவனையை வெளியிடுகிறது.

    வருகிற 16 அல்லது 17-ந் தேதி ஐ.பி.எல். போட்டி மீண்டும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்மசாலா, டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், மும்பை ஆகிய நகரங்களில் மீண்டும் போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை.

    சென்னை, ஐதராபாத், பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய 4 நகரங்களில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெற வாய்ப்பு இல்லை. இறுதிப்போட்டி ஜூன் 1-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறலாம் என்று தெரிகிறது.

    குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் ஐதராபாத்தில் தான் நடைபெறும். அதில் மாற்றம் இருக்காது.

    போர் பதற்றத்தால் போட்டி 1 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பி விட்டனர். அவர்கள் ஐ.பி.எல். போட்டிக்காக மீண்டும் இந்தியா வருவது சந்தேகமே.

    டெல்லி அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் இந்தியா திரும்பமாட்டார் என்று அறிவித்துவிட்டார். இது டெல்லி அணிக்கு பின்னடைவாகும். அதேபோல் பெங்களூர் அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஹாசல்வுட் காயத்தால் இந்தியா வரமாட்டார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டன. 4 இடத்துக்கு 7 அணிகள் போட்டியில் உள்ளன.

    • ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
    • இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றி வந்தார்.

    20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா அதில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் சூர்யகுமார் யாதவ் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அதே நேரத்தில் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்தார்.

    ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக யார்? நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    இந்திய அணி ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    அடுத்த மாதம் 20-ந் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உள்ளது.

    வேகப்பந்து வீரர் ஜஸ்பிரீத் பும்ராவை டெஸ்ட் கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டார். 5 டெஸ்ட் முழு வதும் தன்னால் கேப்டனாக செயல்பட இயலாது என்று பும்ரா தேர்வு குழுவினரிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் டெஸ்ட் கேப்டன் பதவிக்கான போட்டியில் சுப்மன் கில் - ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் சுப்மன் கில்லுக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் அறிவித்திருந்தார்.
    • இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரோகித் 4,301 ரன்கள் அடித்துள்ளார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்

    தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வு அறிவிப்பை விராட் கோலி வெளியிட்டுள்ளார். அவரது பதிவில்,

    இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையைச் சொன்னால், இந்த வடிவம் என்னை அழைத்துச் செல்லும் பயணம் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அது என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, மேலும் நான் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கும் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. வெள்ளை நிற ஜெர்சியில் விளையாடுவது தனிப்பட்ட முறையில் தனது மிகவும் பிடித்தமானது" என்று தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ரன்கள் அடித்துள்ளார்.

    • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு அறிவித்துள்ளார்
    • டி20களுக்கு நன்றி சொல்ல இதுவே சரியான நேரம் என்று நான் நினைத்தேன்

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா.

    இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,301 ரன்கள் அடித்துள்ளார். இதில் 12 சதங்களும், 18 அரை சதங்களும் அடங்கும்.

    இந்நிலையில், டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற கையோடு ஓய்வு அறிவித்தது குறித்து ரோகித் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

    பத்திரிகையாளர் விமல் குமாரிடம் இது தொடர்பாக பேசிய ரோகித், "டி20 உலகக்கோப்பையை நாங்கள் வெல்லவில்லை என்றால் நான் ஓய்வு அறிவித்திருப்பேன். இதனையடுத்து நான் விளையாடுவது சரியாக இருக்காது. அடுத்தவர்களுக்கு நான் வழிவிட்டாக வேண்டும். ஆனால் நாங்கள் கோப்பையை வென்றோம். நான் நன்றாக விளையாடினேன்.

    ஓய்வு பெறுவது குறித்து எதையும் முன்கூட்டியே முடிவு செய்ய முடியாது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற நான் திட்டமிடவில்லை. உண்மையில், கோப்பையை வென்ற பிறகு, நீங்கள் இன்னும் அதிகமாக விளையாட முடியும் என்று நீங்கள் உணர்கிறீர்கள், ஆனால், டி20களுக்கு நன்றி சொல்ல இதுவே சரியான நேரம் என்று நான் நினைத்தேன்" என்று தெரிவித்தார். 

    • தோள்பட்டை வலியால் ஆர்.சி.பி. வீரர் ஜோஷ் ஹேசில்வுட் அவதிப்பட்டு வருகிறார்.
    • ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

    மேலும், ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்குவதற்காக சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீண்டும் அழைக்கும் பணியில் அந்ததந்த அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வரும் ஆர்.சி.பி. அணியின் முக்கிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக சரியான நேரத்தில் குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மந்தனாவுடன் இணைந்து, ஹர்லீன் தியோல் (47), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (41), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (44) ரன்கள் குவித்தனர்.
    • இந்திய வீராங்கனை சினேகா ராணா 9.2 ஓவர்கள் பந்து வீசி, 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இலங்கையில் நடைபெற்ற மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொழும்பில் ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்றது.

    டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்தது. இந்திய இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா சதம் அடித்து விளாசினார்.

    வெறும் 101 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 116 ரன்கள் எடுத்தார். மந்தனாவுடன் இணைந்து, ஹர்லீன் தியோல் (47), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (41), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (44) ரன்கள் குவித்தனர்.

    343 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணி, இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலைத் சமாளிக்க முடியாமல் திணறியது.

    அந்த அணியில் கேப்டன் சாமரி அதபத்லு (51 ரன்கள்) மற்றும் நிலக்ஷிகா சில்வா (48 ரன்கள்) மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ஸ்கோர் செய்தனர். இந்திய வீராங்கனை சினேகா ராணா 9.2 ஓவர்கள் பந்து வீசி, 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமன்ஜோத் கவுர் மூன்று விக்கெட்டுகளையும், ஸ்ரீ சரணி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இறுதியில் இலங்கை அணி 48.2 ஓவர்களில் 245 ரங்களில் சுருண்டது.

    இறுதிப் போட்டியில் அபார சதம் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்மிருதி மந்தனா, 'ஆட்ட நாயகி' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    சினேகா ராணா, 'தொடரின் சிறந்த வீராங்கனை' விருதை வென்றார். இதற்கிடையில், இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த பெண்கள் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்தார்.

    • இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது
    • ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

    மேலும், ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்குவதற்காக சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீண்டும் அழைக்கும் பணியில் அந்ததந்த அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சர்வதேச டி20 போட்டிகளில் டிக்ளேர் செய்ய அனுமதி இல்லை
    • இந்த அசாதாரண நடவடிக்கைக்கு பின் யுஏஇ பந்து வீச்சாளர்கள் கத்தாரின் பேட்டிங்கை இலகுவாக தகர்த்தனர்.

    ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை ஆசிய தகுதிச் சுற்று 2025 இல் நேற்று (சனிக்கிழமை) கத்தாருக்கு எதிரான ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மகளிர் கிரிக்கெட் அணி விளையாடியது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள டெர்த்தாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுஏஇ அணி புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 16 ஓவரில் 0 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.

    ஆட்டத்தின்போது மழை அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாலும், சர்வதேச டி20 போட்டிகளில் டிக்ளேர் செய்ய அனுமதி இல்லை என்பதாலும், யுஏஇ ஒரு தந்திரமான முடிவை எடுத்தது.

    ஒவ்வொரு பேட்டர்களும் கிரீஸுக்கு நடந்து சென்று, பின்னர் வந்தவுடன் உடனடியாக வெளியேறினர். இது யுஏஇ அணி தங்கள் இன்னிங்ஸை விரைவாக முடிக்க அனுமதித்தது.

    இதனால் வானிலை இடையூறுகள் ஆட்டத்தைப் பாதிக்கும் முன்பாகவே அவர்கள் பந்து வீச முடிந்தது. இது டி20 விதிகளின் கீழ் ஒரு தனித்துவமான ஆனால் சட்டப்பூர்வ உத்தியாகும்.

    இந்த அசாதாரண நடவடிக்கைக்கு பின் யுஏஇ பந்து வீச்சாளர்கள் கத்தாரின் பேட்டிங்கை இலகுவாக தகர்த்தனர். இதனால் 11.1 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து கத்தார் 163 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ அணியிடம் தோற்றது.

    இந்த வெற்றியின் மூலம், யுஏஇ நான்கு புள்ளிகள் மற்றும் 6.998 என்ற வலுவான நிகர ரன் விகிதத்துடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. யுஏஇ அணி அடுத்ததாக மே 13 அன்று பாங்காக்கில் உள்ள இதே டெர்த்தாய் மைதானத்தில் மலேசியாவை எதிர்கொள்ளும். 

    ×