என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வெளியே காட்டிக்கொள்ளாத கண்ணீர்.. கோலி ஓய்வு குறித்து அனுஷ்கா உருக்கம்
- உங்களின் சாதனைகள், மைல்கல்கள் குறித்துதான் எல்லாரும் பேசுவார்கள்.
- கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள அளப்பரிய காதல் ஆகியவைதான் எப்போதும் எனது நினைவில் நிலைத்து நிற்கும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி ஓய்வுக்கு அவரது மனைவியும் சினிமா நடிகையுமான அனுஷ்கா சர்மா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உங்களின் சாதனைகள், மைல்கல்கள் குறித்துதான் எல்லாரும் பேசுவார்கள். ஆனால் நீங்கள் வெளியே காட்டிக்கொள்ளாத கண்ணீர், யாரும் பார்க்காத போராட்டங்கள், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள அளப்பரிய காதல் ஆகியவைதான் எப்போதும் எனது நினைவில் நிலைத்து நிற்கும்.
ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு பிறகும், கூடுதல் அடக்கம், ஞானத்துடன் திரும்ப வந்தீர்கள்.. இந்தப் பயணத்தை அருகே இருந்து பார்த்தது எனக்கு கிடைத்த பெருமை என உருக்கமாக பேசியுள்ளார்.






