என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 Cricket League"

    • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு அறிவித்துள்ளார்
    • டி20களுக்கு நன்றி சொல்ல இதுவே சரியான நேரம் என்று நான் நினைத்தேன்

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா.

    இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,301 ரன்கள் அடித்துள்ளார். இதில் 12 சதங்களும், 18 அரை சதங்களும் அடங்கும்.

    இந்நிலையில், டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற கையோடு ஓய்வு அறிவித்தது குறித்து ரோகித் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

    பத்திரிகையாளர் விமல் குமாரிடம் இது தொடர்பாக பேசிய ரோகித், "டி20 உலகக்கோப்பையை நாங்கள் வெல்லவில்லை என்றால் நான் ஓய்வு அறிவித்திருப்பேன். இதனையடுத்து நான் விளையாடுவது சரியாக இருக்காது. அடுத்தவர்களுக்கு நான் வழிவிட்டாக வேண்டும். ஆனால் நாங்கள் கோப்பையை வென்றோம். நான் நன்றாக விளையாடினேன்.

    ஓய்வு பெறுவது குறித்து எதையும் முன்கூட்டியே முடிவு செய்ய முடியாது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற நான் திட்டமிடவில்லை. உண்மையில், கோப்பையை வென்ற பிறகு, நீங்கள் இன்னும் அதிகமாக விளையாட முடியும் என்று நீங்கள் உணர்கிறீர்கள், ஆனால், டி20களுக்கு நன்றி சொல்ல இதுவே சரியான நேரம் என்று நான் நினைத்தேன்" என்று தெரிவித்தார். 

    • உலகளாவிய இந்த கிரிக்கெட் ‘லீக்’ போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
    • ஐ.பி.எல்., பி.பி.எல். (பிக் பாஷ் லீக்) போட்டிகளுக்கு இடையூறு இல்லாத நேரத்தில் இந்த சர்வதேச லீக் போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    ரூ.4347 கோடியில் உலக கிரிக்கெட் 'லீக்' சவுதி அரேபியா திட்டம்இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் 20 ஓவர் லீக் தொடர் நடத்தப்படுகிறது.

    ஐ.பி.எல். போலவே ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் போட்டியும் புகழ்பெற்றது. தென் ஆப்பிரிக்க லீக் உள்ளிட்ட பல போட்டிகளும் பிரபலம் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் உலகளாவிய கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த நாடு ரூ.4347 கோடியை முதலீடு செய்ய தயாராக உள்ளது. கால்பந்து, பார்முலா 1 கார் பந்தயத்தில் சவுதி அரேபியா முதலீடு செய்து இருந்தது. தற்போது பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் லீக் போட்டியையும் நடத்த முடிவு செய்து உள்ளது.

    உலகளாவிய இந்த கிரிக்கெட் 'லீக்' போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. டென்னிஸ் கிராண்ட்சிலாம் போன்று இதை நடத்த திட்டமிட்டுள்ளது.

    சவுதி அரேபியா உள்ள எஸ்.ஆர்.ஜே நிறுவனம் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தொடர்ந்து பேசி வருகிறது. ஆஸ்திரேலியாவின் தொழில் முறை லீக்குகளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டேனி டவுன்செனட் தலைமையிலான குழு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஐ.பி.எல்., பி.பி.எல். (பிக் பாஷ் லீக்) போட்டிகளுக்கு இடையூறு இல்லாத நேரத்தில் இந்த சர்வதேச லீக் போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    ×