என் மலர்
நீங்கள் தேடியது "இலங்கை தொடர்"
- மந்தனாவுடன் இணைந்து, ஹர்லீன் தியோல் (47), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (41), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (44) ரன்கள் குவித்தனர்.
- இந்திய வீராங்கனை சினேகா ராணா 9.2 ஓவர்கள் பந்து வீசி, 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கையில் நடைபெற்ற மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொழும்பில் ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்றது.
டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்தது. இந்திய இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா சதம் அடித்து விளாசினார்.
வெறும் 101 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 116 ரன்கள் எடுத்தார். மந்தனாவுடன் இணைந்து, ஹர்லீன் தியோல் (47), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (41), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (44) ரன்கள் குவித்தனர்.
343 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணி, இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலைத் சமாளிக்க முடியாமல் திணறியது.
அந்த அணியில் கேப்டன் சாமரி அதபத்லு (51 ரன்கள்) மற்றும் நிலக்ஷிகா சில்வா (48 ரன்கள்) மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ஸ்கோர் செய்தனர். இந்திய வீராங்கனை சினேகா ராணா 9.2 ஓவர்கள் பந்து வீசி, 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமன்ஜோத் கவுர் மூன்று விக்கெட்டுகளையும், ஸ்ரீ சரணி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இறுதியில் இலங்கை அணி 48.2 ஓவர்களில் 245 ரங்களில் சுருண்டது.
இறுதிப் போட்டியில் அபார சதம் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்மிருதி மந்தனா, 'ஆட்ட நாயகி' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சினேகா ராணா, 'தொடரின் சிறந்த வீராங்கனை' விருதை வென்றார். இதற்கிடையில், இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த பெண்கள் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்தார்.
- நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின
- களத்திற்குள் வர மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர்
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அப்போது அவரின் ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை வந்தது. இதனால் நேராக க்ரீஸிற்குள் வராமல் மாற்று ஹெல்மட் கொண்டு வருவாறு அணியினருக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணி வீரர்கள் நடுவர்களிடம் டைம் அவுட் முறையீடு செய்தனர்.
எம்சிசி விதியின் படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து வெளியேறினால், அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் க்ரீஸில் இருக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர். இதனால் சோகமடைந்த மேத்யூஸ், உடனடியாக ஷகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்தார்.

ஆனால் மேத்யூஸ் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் உடனடியாக அவுட் கொடுத்தனர். இதன் மூலம் எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரனானார் மேத்யூஸ்.
இதற்கு ரிவெஞ்ச் கொடுக்கும் விதமாக உலககோப்பைக்கு பின்பு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போதிலிருந்தே இலங்கைக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான மோதல் கிரிக்கெட் களத்தில் மட்டுமில்லாது சமூக வலைத்தளங்களிலும் வெடிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் இந்த மோதலுக்கு முடிவுக்கட்டும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை அணி வீரர் பத்திரனாவும் வங்கதேச அணி வீரர் முஸ்தாபிஜூர் ரஹ்மானும் இணைந்து பகத் பாசிலின் ஆவேசம் படத்தின் புகழ்பெற்ற காட்சியை ரீல்ஸ் செய்துள்ளனர்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.






