என் மலர்
விளையாட்டு
- இந்த தொடரில் அவரை நாம் மிஸ் செய்வோம் என்பதில் சந்தேகமில்லை.
- ஹரி ப்ரூக் போலவே கோலியும் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணி இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 25-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கான வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எனது முதல் எண்ணம் என்னவென்றால் விராட் கோலி நன்றாக இருக்க வேண்டும் என்பதே. ஹரி ப்ரூக் போலவே அவரும் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். அதை இந்த விளையாட்டு மதிக்க வேண்டும். கிரிக்கெட்டை விட சில விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும். இந்த தொடரில் கோலியை நாம் மிஸ் செய்வோம் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் முதல் 2 போட்டிகளில் விளையாடுவதை உலக ரசிகர்களால் பார்க்க முடியாது. விராட் கோலி போன்ற வீரர் விலகுவது எந்த அணிக்கும் பின்னடைவாக இருக்கும். மறுபுறம் இந்த வாய்ப்பு முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெல்வதற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இவ்வாறு நாசர் ஹுசைன் கூறினார்.
- 2023-ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார்.
- தென் ஆப்பிரிக்கா அணியில் 2 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
2023 காலண்டர் வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் அசத்திய 11 பேர் கொண்ட கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இந்தியாவின் ரோகித் சர்மாவை ஐசிசி அறிவித்துள்ளது.
கடந்த வருடம் 1255 ரன்களை 52 என்ற சராசரியில் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரோகித்தை தங்களுடைய அணியின் கேப்டன் மற்றும் முதல் துவக்க வீரராக ஐசிசி அறிவித்துள்ளது.
ரோகித்தின் தொடக்க ஜோடியாக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வாகியுள்ளார். 3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், 4-வது இடத்தில் விராட் கோலி உள்ளார். உலகக் கோப்பையில் மட்டும் 765 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருது வென்ற அவர் சச்சினை முந்தி 50 ஒருநாள் சதங்கள் அடித்த முதல் வீரராக வரலாறு படைத்ததை மறக்க முடியாது என ஐசிசி கூறியுள்ளது.
5-வது இடத்தில் நியூசிலாந்தின் டாரில் மிட்செல் மற்றும் 6-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி கிளாசனும் (விக்கெட் கீப்பர்) 7-வது இடத்தில் அதே அணியின் ஆல் ரவுண்டர் மார்கோ யான்சென் இடம் பிடித்துள்ளனர். 8-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
9, 10, 11-வது இடங்கள் முறையே இந்தியாவின் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி தேர்வாகியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டார்ல் மிட்சேல், ஹென்றிச் க்ளாஸென், மார்கோ யான்சென், ஆடம் ஜாம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி
- தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
- தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.
ஐதராபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ராகுல் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். அதுபற்றி அணி தேர்விலேயே நாங்கள் தெளிவாக உள்ளோம். நாங்கள் இரண்டு விக்கெட் கீப்பர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். உண்மையிலேயே அவர் சிறப்பாக விளையாடினார். தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.
ஆனால் ஐந்து டெஸ்ட் போட்டிகளை கருத்தில் கொண்டும், இங்குள்ள சூழ்நிலையை பொறுத்தும் விக்கெட் கீப்பர் இடத்திற்கு மற்ற இரண்டு வீரர்களிடையே (கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜூரல்) போட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு கூறியுள்ளார்.
- இன்று நடந்த 2வது காலிறுதியில் சபலென்கா வென்றார்.
- அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை கோகோ கவூபை சந்திக்கிறார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது காலிறுதிப் போட்டியில் பெலார்சின் அரினா சபலென்கா, செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவாவுடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பார்பராவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ கவூபுடன் மோதுகிறார்.
- மகளிர் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது.
- ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.
மும்பை:
மகளிர் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.
முதலாவது மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் வரும் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், இந்த முறை தொடர் பெங்களூரு, டெல்லியில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சீசனைப் போல இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஐ.பி.எல். தொடர் பிப்ரவரி 23-ம் தேதி முதல் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 15-ம் தேதி எலிமினேட்டர் ஆட்டமும், மார்ச் 17-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி ஆட்டங்கள் டெல்லியில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
- அமெரிக்க வீரரை 7-6, 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேற்றம்.
- இவர் 58 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல்நிலை வீரரும், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் ஜோகோவிச் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 7-6, 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் 4-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ கவூப் 7-6 (8-6), 6-7 (3-7) 6-2 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனை மர்டா கோஸ்டியூக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஐபிஎல் போட்டி மார்ச் முதல் மே வரையில் நடத்தப்படுவது வழக்கம்.
- பாராளுமன்ற தேர்தல் இருப்பதால் போட்டிக்கான அட்டவணையை வெளியிட முடியாமல் இருக்கிறது பிசிசிஐ.
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது.
17-வது ஐ.பி.எல். டி20 போட்டிக்கான அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) போட்டி அட்டவணையை அறிவிக்க முடியாமல் இருக்கிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
நாங்கள் ஐ.பி.எல். அட்டவணை பற்றி விவாதித்தோம். பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தகவலுக்காக காத்திருப்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. ஐ.பி.எல். போட்டி நடைபெறும் நேரத்தில்தான் தேர்தல் வருகிறது.
ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில்தான் நடைபெறும். வேறு நாட்டுக்கு மாற்றுவது பற்றி எந்த யோசனையும் இல்லை. தேர்தல் தேதிக்காக காத்திருக்கிறோம். ஏனென்றால் அதன் அடிப்படை பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
முழுப் போட்டியையும் இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள விராட் கோலிக்கு அழைப்பு.
- விழாவில் கலந்து கொள்ளவில்லை, இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில் இருந்தும் விலகியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவருக்கும் இவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
ஆனால் இருவரும் கலந்து கொள்ளவில்லை. கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்காக அயோத்தியில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். கூட்டத்தில் ஒருவர் விராட் கோலியே போன்று இருந்தார். அவரது நடை, செயல் உண்மையான விராட் கோலி போன்றே இருந்தது.
மேலும், இந்திய அணியின் ப்ளூ ஜெர்சி அணிந்திருந்தார். இதனால் விராட் கோலிதான் வந்துள்ளார் என நினைத்த அவரது ரசிர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க ஆரம்பித்தனர். பின்னர்தான் அவர் போலி விராட் கோலி எனத் தெரியவந்தது. இருந்த போதிலும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக இந்திய அணி நிர்வாகத்திற்கும், கேப்டன் ரோகித் சர்மாவிற்கும் தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ-யும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.
தனிப்பட்ட காரணத்திற்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய விராட் கோலி, அதன்காரணமாகத்தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
- கேலோ இந்தியாவில் 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
- மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நாடுகளில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.
இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 6 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன், பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
- முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், சிறிய ஓய்வுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார்.
அதனைத்தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இங்கிலாந்து அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜன.25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய அணி நிர்வாகத்திடம் அவர் கூறியதாவது, " நாட்டிற்காக எப்போதும் விளையாடுவது தான் என்னுடைய பணி. இருப்பினும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்" எனக் கூறியுள்ளார். விராட் கோலியின் இந்த முடிவிற்கு இந்திய அணி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- 2012ல் விளையாட துவங்கிய மேக்ஸ்வெல், அனைத்து வடிவத்திலும் சிறப்பாக ஆடினார்
- ஐசிசி உலக கோப்பை தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர், 35 வயதான க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell).
2012ல் இருந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் மேக்ஸ்வெல்.
கடந்த 2023 நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்.
2022ல் கால்முறிவின் காரணமாக 3 மாதங்களுக்கும் மேல் விளையாடாமல் இருந்தார்.
சென்ற வருடம் க்ளென் தொடர்ச்சியாக பல காயங்களை சந்தித்தார். அகமதாபாத் நகரில் கீழே விழுந்ததில் ரத்த கட்டு ஏற்பட்டது.
ஆனாலும், உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்த இறுதி ரன்களை எடுத்தவர் க்ளென் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தினார். பிறகு முன்னாள் ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர் ப்ரெட் லீ நடத்தி வரும் "சிக்ஸ் அண்ட் அவுட்" எனும் இசைக்குழுவின் கச்சேரியை ரசித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவர் ராயல் அடிலெய்ட் (Royal Adelaide) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அதிக மது அருந்தியதால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என கண்டறிய ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரெலியா (Cricket Australia), இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
- முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
- இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
சிட்னி
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் இருவரும் விலகியுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம் பிடித்திருந்த டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகத்தில் உள்ளது.






