search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    விராட் இல்லாதது இங்கிலாந்துக்கு சாதகம்- நாசர் ஹூசைன்
    X

    விராட் இல்லாதது இங்கிலாந்துக்கு சாதகம்- நாசர் ஹூசைன்

    • இந்த தொடரில் அவரை நாம் மிஸ் செய்வோம் என்பதில் சந்தேகமில்லை.
    • ஹரி ப்ரூக் போலவே கோலியும் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார்.

    இங்கிலாந்து அணி இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 25-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார்.

    இந்நிலையில் விராட் கோலி விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கான வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது முதல் எண்ணம் என்னவென்றால் விராட் கோலி நன்றாக இருக்க வேண்டும் என்பதே. ஹரி ப்ரூக் போலவே அவரும் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். அதை இந்த விளையாட்டு மதிக்க வேண்டும். கிரிக்கெட்டை விட சில விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும். இந்த தொடரில் கோலியை நாம் மிஸ் செய்வோம் என்பதில் சந்தேகமில்லை.

    தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் முதல் 2 போட்டிகளில் விளையாடுவதை உலக ரசிகர்களால் பார்க்க முடியாது. விராட் கோலி போன்ற வீரர் விலகுவது எந்த அணிக்கும் பின்னடைவாக இருக்கும். மறுபுறம் இந்த வாய்ப்பு முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெல்வதற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    இவ்வாறு நாசர் ஹுசைன் கூறினார்.

    Next Story
    ×