search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் ஐ.பி.எல். 2024: முதல் போட்டி எப்போது தெரியுமா?
    X

    மகளிர் ஐ.பி.எல். 2024: முதல் போட்டி எப்போது தெரியுமா?

    • மகளிர் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது.
    • ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.

    மும்பை:

    மகளிர் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

    முதலாவது மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் வரும் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், இந்த முறை தொடர் பெங்களூரு, டெல்லியில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


    பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சீசனைப் போல இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகளிர் ஐ.பி.எல். தொடர் பிப்ரவரி 23-ம் தேதி முதல் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 15-ம் தேதி எலிமினேட்டர் ஆட்டமும், மார்ச் 17-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி ஆட்டங்கள் டெல்லியில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×