என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றனர்.
    • அந்த இருவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என கபில் தேவ் கூறினார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதையடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்தனர். அதேசமயம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என தெரிவித்துள்ளனர்

    டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

    இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.டோனியை போன்று விராட் கோலி, ரோகித் சர்மாவின் இடத்தையும் இந்திய அணியில் யாராலும் நிரப்ப முடியாது என இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கபில் தேவ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இந்திய அணியில் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வேலையாட்கள். தற்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுள்ளனர்.

    அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தமக்கென்று தரத்தை உருவாக்கிய விராட் கோலியை இந்தியா கண்டிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிஸ் செய்யும்.

    அந்த இருவருமே சச்சின், தோனியைப் போன்றவர்கள். அந்த இருவரின் இடத்தை யாரையும் வைத்து மாற்றமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நார்வே வீரர் தோல்வி அடைந்தார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இதில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், பிரேசில் வீரர் தியாகோ மான்டெய்ரோ உடன் மோதினார்.

    இதில் கேஸ்பர் ரூட் 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். தியாகோ மான்டெய்ரோ காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இலங்கை U19 அணியின் முன்னாள் கேப்டனாக தம்மிகா நிரோஷனா இருந்தார்.
    • இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இலங்கை அணியின் முன்னாள் வீரரான தம்மிகா நிரோஷனா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை U19 அணியின் முன்னாள் கேப்டனாக அவரை நேற்று இரவு அவது வீட்டில் வைத்து மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நடந்த போது அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடன் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நிரோஷனாவை கொலை செய்தவர் 12 ரக போர் துப்பாக்கியை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கம்பீர் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய உதவியாளர்களை பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது உதவியாளர்களாக பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர் யார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிடவில்லை.

    அவர் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய உதவியாளர்களை பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்தார். ஆனால் அவருடைய ஐந்து பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்காக கம்பீர் பரிந்துரைத்தார். 

    இவருக்கு முன் முன்னாள் இந்திய வீரர் ஆர் வினய் குமார் மற்றும் பாலாஜி இருவரும் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து பீல்டிங் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் மற்றும் ஜான்டி ரோட்ஸ் ஆகியோரை கம்பீர் பரிந்துரைத்தார். இந்த ஐந்து பரிந்துரைகளும் பிசிசிஐ-யால் நிகராகரிக்கப்பட்டது.


    கம்பீரின் பரிந்துரைகளில், முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டரான அபிஷேக் நாயர் மட்டுமே கம்பீரின் துணைப் பணியாளர்களில் ஒரே ஒருவராகத் இடம் பெறுகிறார்.

    • இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.

    தற்போது விடுமுறையில் இருந்து வரும் ரோகித் சர்மா, தனது விடுமுறையை குறைத்துக்கொண்டு அடுத்த மாதம்நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்கிறார்.

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார் என தெரிகிறது.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதற்கு முன் தனது வருகையை பிசிசிஔக்கு அறிவிப்பார் என தெரிகிறது.

    ரோகித் சர்மா கடந்த மாதம் ஐசிசி கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டனாக ஆனார். இவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேட்டிங் தரவரிசையில் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
    • பந்து வீச்சாளர் தரவரிசையிலும் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 5-வது இடத்தில் தொடருகிறார்.

    இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 3 இடம் முன்னேறி 12-வது இடத்தையும், தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 2 இடம் உயர்ந்து 15-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கிறார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-3 இடங்களில் முறையே இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டன், சாரா கிளென், இந்தியாவின் தீப்தி ஷர்மா மாற்றமின்றி நீடிக்கிறார்கள். இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் 10-வது இடமும், ராதா யாதவ் 15-வது இடமும் , பூஜா வஸ்ட்ராகர் 23-வது இடமும் , ஸ்ரேயங்கா பட்டீல் 60-வது இடமும் வகிக்கிறார்கள்.

    • முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.
    • இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ஜெய்ஸ்வால் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் 142 ரன்கள் குவித்ததன் மூலம் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் கெய்க்வாட் 2 இடங்கள் பின்தங்கி 8-வது இடம்பிடித்துள்ளார். சுப்மன் கில் 37-வது இடத்தில் உள்ளார்.

    • யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று ஹர்பஜன் தெளிவுபடுத்தினார்.
    • விசாரணைக்காக இந்த புகார் மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும்," என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    இன்ஸ்டாகிராம் வீடியோவில் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் , சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், குர்கீரத் மான் ஆகியோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ குறித்து ஹர்பஜன் தனது எக்ஸ் பதிவில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

    இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குநர் அர்மான் அலி, அமர் காலனி போலீஸ் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

    இந்தப் புகாரில் கிரிக்கெட் வீரர்களை தவிர மெட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தியா தேவநாதன் ஆகியோரும் அடங்குவர்.

    புகாரின்படி, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ஐ மீறி, இதுபோன்ற வீடியோவை பதிவேற்றம் செய்ய அனுமதித்ததாக கூறப்பட்டுள்ளது.

    "இது தொடர்பாக அமர் காலனி போலீஸ் நிலையத்திற்கு புகார் கிடைத்துள்ளது. விசாரணைக்காக இந்த புகார் மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும்," என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • திருச்சி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்து
    • 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கோவை:

    கோவையில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் இறங்கிய திருச்சி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவை அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திருச்சி அணி தத்தளித்தது.

    சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடியது. 7வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சய் யாதவ் 34 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. ஜாபர் ஜமால் அதிரடியாக ஆடி 41 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கோவை அணி சார்பில் கேப்டன் ஷாருக் கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சுரேஷ்குமார் டக் அவுட்டாகி வெளியேற அடுத்ததாக வந்த சாய் சுதர்சன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 7 ரன்னிற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து கோவை தடுமாறியது. அப்போது களத்தில் இருந்த சுஜய் - முகிலேஷ் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர்.

    16.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை சேர்த்து கோவை அணி எளிதாக இப்போட்டியில் வென்றது. நிதானமாக விளையாடிய முகிலேஷ் 63 ரன்களும் சுஜய் 48 ரன்களும் அடித்தனர்.

    சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக செயல்பட்டார்.
    • இலங்கை தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், பின்னர் சூர்யகுமார் யாதவ் நிரந்தர கேப்டனாக நியமிக்க வாய்ப்பு.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வந்தார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அத்துடன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20-யில் இருந்து ஓய்வு பெற்றனர்.

    இதனால் டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 27-ந்தேதி விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தொடரில் இருந்துதான் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இதனால் இந்த தொடருக்காக அறிவிக்கப்படும் கேப்டன் 2026 உலகக் கோப்பை வரை நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில்தான் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா இலங்கை டி20 தொடரில் விளையாடுகிறார். இந்த தொடருக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம். ஆனால் இலங்கை தொடருக்கு மட்டுமல்ல, 2026 டி20 உலகக் கோப்பை வரை சூர்யகுமார் சாத்தியமான கேப்டனாக இருக்கலாம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இன்று மாலை மாற்றம் செய்யப்பட்ட திட்டம் குறித்து கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் ஹர்திக் பாண்ட்யாவிடம் பேசியதாகவும், நீண்ட கால ஆப்சனை கருத்தில் கொண்டு ஸ்திரதன்மையை உறுதி செய்ய இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வென்றார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், ஸ்வீடனின் எலியாஸ் ஒய்மெர் ஆகியோர் மோதினர்.

    இதில் சுமித் நாகல் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அடுத்த சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் அர்ஜென்டினா வீரர் மரியானோ நவோனுடன் மோத உள்ளார்.

    • முதலில் ஆடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் 124 ரன்கள் எடுத்தது.
    • கோவை அணி கேப்டன் ஷாருக் கான் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    கோவை:

    கோவையில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் இறங்கிய திருச்சி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவை அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திருச்சி அணி தத்தளித்தது.

    சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடியது. 7வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சய் யாதவ் 34 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. ஜாபர் ஜமால் அதிரடியாக ஆடி 41 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கோவை அணி சார்பில் கேப்டன் ஷாருக் கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.

    ×