என் மலர்
விளையாட்டு
- பீல்டிங் செய்கிறேன் என்ற பெயரில் பவுலர்கள் பவுண்டரி எல்லை சென்று தண்ணீர் குடித்து வருகின்றனர்.
- அப்படி பவுண்டரி எல்லைக்கு சென்று அடிக்கடி குடித்தால் பின்னர் தண்ணீர் இடைவெளி எதற்கு?
புதுடெல்லி:
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அடிக்கடி பவுலர்கள் ஓவர்களுக்கு இடையேயும், பவுண்டரி எல்லைக்கும் சென்று தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
குறிப்பாக, பீல்டிங் செய்கிறேன் என்ற பெயரில் அடிக்கடி பவுலர்கள் பவுண்டரி எல்லைக்குச் சென்று தண்ணீர் குடித்து வருகின்றனர். அப்படி பவுண்டரி எல்லைக்கு சென்று அடிக்கடி குடித்தால் பின்னர் தண்ணீர் இடைவெளி எதற்கு? தண்ணீர் இடைவெளி வரை காத்திருக்கும் பேட்ஸ்மேன்கள் மனிதர்கள் இல்லையா? என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, சுனில் கவாஸ்கர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
6 பந்துகள் வீசி முடித்தபின் ஒரு பந்துவீச்சாளர் டிரிங்ஸ் பிரேக் எடுக்கிறார் என்றால், பிறகு எதற்கு கூடுதலாக டிரிங்ஸ் பிரேக் என ஒன்றை வழங்க வேண்டும்.
6 பந்து வீசிய பவுலருக்கே டிரிங்ஸ் பிரேக் என்றால், ஒரு ஓவரில் 8 ரன் அல்லது அதற்கு மேல் அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு எந்த டிரிங்ஸ் பிரேக்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனவே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, எதிர் கேப்டனின் அனுமதி பெற்ற பிறகு பானங்கள் மைதானத்திற்குள் எடுத்து வரவேண்டும் என்ற முறையை திரும்ப கொண்டுவர வேண்டும்.
ரிசர்வ் வீரர்கள் ஓவர்களுக்கு இடையே மைதானத்துக்குள் சென்று தங்களுடைய வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்காதவாறு நடுவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அவரது சக வீரருக்கு குளிர்பானம் தர வேண்டுமானால் அது பவுண்டரி லைனில் இருந்தே கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் இந்திய வீரர் சுமித் நாகல், அர்ஜெண்டினாவின் மரியானோ நவோன் உடன் மோதினார்.
இதில் சுமித் நாகல் 4-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மரியானோ நவோன் காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் சுமித் நாகல் தரவரிசையில் 68-வது இடத்தில் உள்ளார். சுமித் நாகல் முதல் 70 இடங்களுக்குள் வருவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமானது.
- உலகக் கோப்பை பயணம் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என ஷிவம் துபே கூறியுள்ளார்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் என அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட ஷிவம் துபே, ஆரம்ப கட்டத்தில் தடுமாற்றமாகவே செயல்பட்டார். இதனால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வாருங்கள் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இறுதிப்போட்டியில் களமிறங்கிய அவர் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 16 பந்தில் 27 ரன்களை குவித்தார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை பயணம் தமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என சிவம் துபே கூறியுள்ளார். கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த ஆதரவினாலேயே இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடியதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஷிவம் துபே தனியார் இணைய தளத்தில் பேசியதாவது:
டி20 உலகக் கோப்பை பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. இறுதிப்போட்டி மிக முக்கிய தருணமாக அமைந்தது. அன்றைய நாளில் நானும் அணியுடன் சேர்ந்து வெற்றியில் பங்காற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உலகக் கோப்பையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எனக்கு பாடமாகும். பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை உற்சாகப்படுத்தியது.
எனக்கு அசைக்க முடியாத, நம்பமுடியாத ஆதரவை கொடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நேர்மறையாக இருந்து கடினமாக உழைக்க ஊக்குவித்தனர். எனது திறமை மீது நம்பிக்கை வைத்த அவர்களின் வழிகாட்டுதல் என்னை நம்புவதற்கு உதவியது.
இந்த அனுபவம் வருங்காலத்தில் அணியின் வெற்றிக்காக என்னை இன்னும் வலுவாக மேம்படுத்த உதவுமென்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
- இலங்கை தலைநகர் கொழும்புவில் ஐ.சி.சி வருடாந்திர மாநாடு நாளை தொடங்குகிறது.
- இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
கொழும்பு:
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இதற்கிடையே, ஐ.சி.சி வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை தொடரை நடத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு இந்திய அணி செல்ல மறுப்பது, ஐ.சி.சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளை அமெரிக்காவில் நடத்தியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ.167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
முக்கியமாக, நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மிக எதிர்பார்க்கப்பட்ட போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.சி.சி. தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் முடிவடைய உள்ளதால் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவை அடுத்த ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க வலியுறுத்தப்படலாம் என தகவல் வெளியானது.
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ரஷிய வீரர் தோல்வி அடைந்தார்.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் தியாகோ டிரண்டே உடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 6-7 (5-7), 6-3, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். தியாகோ டிரண்டே காலிறுதிக்கு முன்னேறினார்.
- இலங்கையில் உள்ள தம்புல்லா மைதானத்தில் நடக்கிறது.
- இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது.
தம்புல்லா:
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 26 ந் தேதி வரை இலங்கையில் உள்ள தம்புல்லா மைதானத்தில் நடக்கிறது.
இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி ஏ பிரிவில் இருக்கிறது.
பாகிஸ்தான், ஐக்கிய அரபுஎமிரேட்ஸ், நேபாளம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகியவை பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
நாளைய தொடக்க நாளில் 2 ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோது கின்றன. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது.
இரு அணிகளும் இதுவரை 14 இருபது ஓவர் போட்டியில் விளையாடி உள்ளன. இதில் இந்தியா 11 போட்டியிலும் பாகிஸ்தான் 3 போட்டியிலும் வென்றுள்ளன. இந்திய அணியின் ஆதிக்கம் நாளையும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நாளை பிற் பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நேபாளம்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
- உடல் பருமனாக இருந்தாலும் அவரது பேட்டிங்கும், கேப்டன்ஷிப்பும் அந்த சமயத்தில் வெகுவாக கவர்ந்தது.
- 60 வயதான ரணதுங்கா உடல்எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போது (50 ஓவர்) அந்த அணியின் கேப்டனாக இருந்தவர், அர்ஜூனா ரணதுங்கா. உடல் பருமனாக இருந்தாலும் அவரது பேட்டிங்கும், கேப்டன்ஷிப்பும் அந்த சமயத்தில் வெகுவாக கவர்ந்தது.

கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் குதித்தார். எம்.பி.யாகி மந்திரியாகவும் பதவி வகித்தார். கிரிக்கெட் நிர்வாகத்திலும் பல பணிகளை கவனித்தார்.
இந்த நிலையில் 60 வயதான ரணதுங்கா உடல்எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார். இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. ரணதுங்காவா இது, நம்பவே முடியவில்லை என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியமுடன் பதிவிட்டு வருகின்றனர்.
- காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது.
- உழைப்பு போட்டால் வெற்றி நிச்சயம். கடின உழைப்பு ஒருபோதும் பலனளிக்காமல் போகாது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த உலகக்கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.
காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காயத்திலிருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதை பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "2023 உலக கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு எனது பயணம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், எனது கடின உழைப்பிற்கான வெற்றி, எனக்கு டி20 உலக கோப்பையில் கிடைத்தது. உழைப்பு போட்டால் வெற்றி நிச்சயம். கடின உழைப்பு ஒருபோதும் பலனளிக்காமல் போகாது. நம்மால் முடிந்தவரை முயற்சிக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
- மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
- அதிரடியாக விளையாடிய பூபதி அரைசதம் கடந்தார்.
கோவை:
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20கிரிக்கெட் போட்டி சேலத்தில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் மோதின. போட்டி துவங்குவதற்கு முன்பு மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 36 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் அணி தரப்பில் சுபோத் பதி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
109 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய சிவம் சிங் 4 ரன்களிலும் விமல் குமார் 17 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - பூபதி வைஷ்ணவ குமார் திருப்பூர் அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். அதிரடியாக விளையாடிய பூபதி அரைசதம் கடந்தார்.
இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 11.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.
Iconic Shots from an Unforgettable Match ??#DindigulDragons #IdhuNeruppuDa #TNPL2024 pic.twitter.com/tcEzCiiK53
— Dindigul Dragons (@DindigulDragons) July 17, 2024
- ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் நடால், ரூட் ஜோடி வென்றது.
பாஸ்தாத்:
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் நார்வேயின் கேஸ்பர் ரூட், ஸ்பெயினின் ரபேல் நடால் ஜோடி, பிரான்சின் தியோ ஆரிபேஜ், ரஷியாவின் ரோமன் சப்யூலின் ஜோடியுடன் மோதியது.
இதில் ரூட்-நடால் ஜோடி 6-4, 3-6, 12-10 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
- பாண்ட்யாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித், கோலி, ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தேர்வுக்குழுவின் சில உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்ததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த தேர்வுக்குழு கூட்டம் நாளை மறுநாள் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
- இலங்கை அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
நியூசிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களுக்கான ஆட்டவணையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது நவம்பர் 28-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 28-ம் தேதியும், ஒருநாள் தொடரானது ஜனவரி 5-ம் தேதியும் தொடங்குகிறது.
அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மார்ச் 16-ம் தேதி தொடங்குகிறது.
நியூசிலாந்து vs இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடர்
முதல் டெஸ்ட்: நவம்பர் 28-டிசம்பர் 2, கிறிஸ்ட்சர்ச்
2-வது டெஸ்ட்: டிசம்பர் 6-10, வெலிங்டன்
3-வது டெஸ்ட்: டிசம்பர் 14-18, ஹாமில்டன்
நியூசிலாந்து vs இலங்கை தொடர்
முதல் டி20: டிசம்பர் 28, டௌரங்கா
2-வது டி20: டிசம்பர் 30, டௌரங்கா
3-வது டி20: ஜனவரி 2, நெல்சன்
முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 5, வெலிங்டன்
2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 8, ஹாமில்டன்
3-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 11, ஆக்லாந்து
நியூசிலாந்து vs பாகிஸ்தான் தொடர்
முதல் டி20: மார்ச் 16, கிறிஸ்ட்சர்ச்
3-வது டி20: மார்ச் 18, டுனெடின்
3-வது டி20: மார்ச் 21, ஆக்லாந்து
4-வது டி20: மார்ச் 23, டௌரங்கா
5-வது டி20: மார்ச் 26, வெலிங்டன்
முதல் ஒருநாள் போட்டி: மார்ச் 29, நேப்பியர்
3-வது ஒருநாள் போட்டி: ஏப்ரல் 2, ஹாமில்டன்
3-வது ஒருநாள் போட்டி: ஏப்ரல் 5, டௌரங்கா






