என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 163 ரன்கள் சேர்த்தது.

    சிட்னி:

    இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டி 20 போட்டியில் மழை காரணமாக டக்வொர்த் லெவிஸ் முறைப்படி இந்தியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கான்பெராவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஜார்ஜியா வோல் 57 பந்தில் 88 ரன்கள் குவித்தார். பெத் மூனி 46 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 29 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 31 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 19 ரன்கள் இத்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்திய அணியின் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 7 ரன்னில் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

    • துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் கோகோ காப் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பெகுலா 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-0, 6-2 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை அமெண்டா அனிசிமோவா உடன் மோதுகிறார்.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.
    • இப்ராகிம் சட்ரன் அதிரடியாக ஆடி 56 பந்தில் 95 ரன்கள் அடித்தார்.

    சென்னை:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 39-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற கனடா அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரான் அதிரடியாக ஆடி 56 பந்தில் 95 ரன்கள் குவித்தார். செடிகுல்லா அடல் 44 ரன்னும், குர்பாஸ் 30 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும் எடுத்தனர்.

    கனடா சார்பில் ஜஸ்கரன் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கனடா அணி களமிறங்கியது. ஹர்ஷ் தாக்கர் 30 ரன்னும், சாத் பின் ஜாபர் 28 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், கனடா அணி 20 ஓவரில் 118 ன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது நபி 4 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • காலிறுதியில் ரஷியாவின் ரூப்லெவ் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கிரீசின் ஸ்டெபனஸ் சிட்சிபாஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிட்சிபாஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் அடித்தது.
    • இப்ராஹிம் சத்ரான் 95 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - கனடா அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ரன்களிலும் அடுத்து இறங்கிய குல்புதீன் நயிப் 1 ரன்னிலும் செடிகுல்லா அடல் 44 ரன்னிலும் அவுட்டாகினர். அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் சத்ரான் அரைசதம் அடித்து அசத்தினார்.

    20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 95 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 736 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
    • இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. லக்னோவில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதியில் கர்நாடகா- உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 736 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 232 ரன்களும் கே.எல். ராகுல் 141 ரன்களும் ரவிச்சந்திரன் ஸ்மரன்135 ரன்களும் அடித்தனர்.

    இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆடிய கர்நாடகா அணி 323 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது.

    இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் அடித்த நிலையில் போட்டி டிரா ஆனது. முதல் இன்னிங்ஸ் ரன்கள் அடிப்படையில் கர்நாடகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. வரும் 24ம் தேதி ஹூப்ளியில் நடக்க உள்ள இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் கர்நாடகா பலப்பரீட்சை நடத்துகிறது.

    • இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது
    • அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாம்பே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார்.

    ஜிம்பாம்பே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி, ப்ராட் ஏவன்ஸ், க்ரேம் கிரெமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாம்பே 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ரன்கள் அடித்து ஜிம்பாம்பே அணியை வெற்றி பெறவைத்தார்.

    • இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது
    • அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாம்பே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார்.

    ஜிம்பாம்பே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி, ப்ராட் ஏவன்ஸ், க்ரேம் கிரெமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹோப் 75 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் - இத்தாலி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹோப் 75 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இதையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இத்தாலி அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரங்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. டீக் போட்டியில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று வசதியுள்ளது.

    • நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் துபே 31 பந்தில் 66 ரன்கள் விளாசினார்.
    • இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஷிவம் துபே தட்டிச் சென்றார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 31 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஷிவம் துபே தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டத்திற்கு எம்.எஸ். தோனி அளித்த அறிவுரையே காரணம் என்று ஷிவம் துபே நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மஹி பாய் என்னிடம் சொன்னது. ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரி அடிக்கலாம் அல்லது ஒரு ரன் எடுக்கலாம் என்று தோனி எனக்குக் கூறினார். இது எனது பேட்டிங்கில் தெளிவை ஏற்படுத்தியது. அதனால் நான் ஆரம்பத்தில் வரும்போது அந்த விஷயம் எப்போதும் என் மனதில் இருக்கும்.

    தோனியின் வழிகாட்டுதல் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இக்கட்டான சூழலில் இந்திய அணியை மீட்க அது உதவியது என துபே கூறினார்.

    • ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26, 2026 அன்று தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்தியாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களின் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே போட்டி அட்டவணை வெளியிடப்படும்.

    டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்கவில்லை. ரன் குவிப்பில் ஏற்பட்ட சரிவு மற்றும் காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26, 2026 அன்று தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களின் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, பிசிசிஐ முழுமையான போட்டி அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான கில், தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அந்த அணி வெளியிட்டுள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப் 75 ரன்னில் அவுட் ஆனார்.
    • இத்தாலி தரப்பில் பென் மனென்டி, கிரிஷான் கலுகமகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் - இத்தாலி அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிங், ஹோப் களமிறங்கினர். இதில் கிங் 4 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து ஹெட்மயர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ஹோப்புடன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய ரோஸ்டன் 25 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரோவ்மன் பவல் 9 ரன்னில் நடையை கட்டினார்.

    ஒருமுனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹோப் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 75 ரன்னில் அவுட் ஆனார். கடைசியில் ரூதர்ஃபோர்ட் மற்றும் மேத்யூ ஃபோர்டு அதிரடியாக விளையாட 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.

    இத்தாலி தரப்பில் பென் மனென்டி, கிரிஷான் கலுகமகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ×