என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ‘எப்பொழுதெல்லாம் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடுகிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் மைதானத்தில் பயந்திருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது.
    • ஒரு கிரிக்கெட் மைதானத்தில் கை குலுக்கிக் கொள்ளாதது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்

    இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில்தான் கைக்கொடுப்பதில்லை, ஆனால் மூடிய கதவுகளுக்கு பின் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

    பிப்.15ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு, முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் அலாஸ்டர் குக், மைக்கேல் வாகன், டேவிட் லாயிட் மற்றும் பில் டஃப்னெல் ஆகியோர் பாட்காஸ்ட் ஒன்றில் பேசினர். அப்போது இந்தியா - பாகிஸ்தான் குறித்து பேசிய அவர்கள், 

    'பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவதைப் பார்த்தால், அது ஒரு சமமற்ற போட்டி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது' என்று டஃப்னெல் கூறினார்.

    மைக்கேல் வாகன், 'எப்பொழுதெல்லாம் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடுகிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் மைதானத்தில் பயந்திருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது. அந்த ஒட்டுமொத்தச் சூழலும் கசப்பானது (சரியற்றது), இல்லையா? ஒரு கிரிக்கெட் மைதானத்தில் கை குலுக்கிக் கொள்ளாதது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்' என தெரிவித்தார்.

    'ஆனால் அவர்கள் ரகசியமாக (கேமராக்கள் இல்லாத போது) பேசிக்கொள்வது இல்லையா? அவர்கள் அனைவரும் இயல்பாக பேசிக்கொள்கிறார்கள் என்று நான் எங்கோ படித்தேனே," என்று குக் கூறினார். மேலும் இது வெறும் வெளிப்பகட்டுக்காகத்தானே (Show)? மைதானத்தில் அவர்கள் கை குலுக்கிக் கொள்வதில்லை, ஆனால் கேமராக்கள் இல்லாத தனிப்பட்ட இடங்களில் அவர்கள் அனைவரும் பேசிக்கொள்கிறார்கள், சகஜமாகத்தான் இருக்கிறார்கள்' என தெரிவித்தார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தொடர்ந்து ஒரே குழுவில் இடம் பெறுவதை விமர்சித்த லாயிட், ஐசிசி திட்டமிட்டு இப்போட்டிகளை நடத்துவது விளையாட்டின் நேர்மையைக் குலைப்பதாகத் தெரிவித்தார். 

    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின்போது இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்கவில்லை. இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது எனவும், இது ஒரு நல்ல ஸ்போர்ட்மேன்ஷிப்பிற்கு அழகல்ல எனவும் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது டி20 உலகக்கோப்பையில் கொழும்புவில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போதும், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா ஆகியோர் டாஸ் போடும்போது கைகுலுக்கவில்லை.

    இந்நிலையில் "மூடிய கதவுகளுக்குப் பின்னால்" அவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என அலிஸ்டர் குக் தெரிவித்தது கவனம் ஈர்த்துவருகிறது. 

     

    • 40வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஓமன் அணிகள் மோதி வருகின்றன.
    • 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.

    20 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் இன்றுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது.

    இன்றைய 40வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஓமன் அணிகள் மோதி வருகின்றன.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய ஓமன் பேட்டிங் இறங்கியது. ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஓமன் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

    16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஓமன் அணி மொத்தமே 104 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து 105 என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரலியா பேட்டிங் ஆடி வருகிறது.

    ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஓமன் தரப்பில் வாசிம் அலி அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். 

    • இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ முடிக்கவில்லை; ஒரு தெளிவோடு முடிக்கிறேன்.
    • அதிக அறிவோடும், சுய விழிப்புணர்வோடும், எனக்குத் தகுதியான வாழ்க்கையை அமைப்பேன் என்ற உறுதியோடும் நான் முன்னோக்கிச் செல்கிறேன்.

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், தனது மனைவி இஷானி ஜோஹரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளதாக அறிவித்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "நான் என்னைப்பற்றியோ, எனது மதிப்பு குறித்தோ அல்லது நான் விரும்பிய வாழ்க்கையைப் பற்றியோ முழுமையாகப் புரிந்துகொள்ளாத இளம் வயதிலேயே திருமண வாழ்க்கையில் இணைந்தேன். அதைத் தொடர்ந்து நான் எதிர்பார்க்காத பல பாடங்களைக் கற்றேன். கடந்த பதினைந்து மாதங்களாக நீதிமன்ற அறைகளில் பொறுமையையும், மீண்டு வரும் குணத்தையும், உண்மையால் கிடைக்கும் வலிமையையும் அறிந்துகொண்டேன். 

    இன்று, என் வாழ்வின் அந்த அத்தியாயம் முறைப்படி முடிவுக்கு வருகிறது. உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, பெரும் விலைகொடுத்து இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இது என் வாழ்வின் இந்த நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளதோடு எனக்கு ஒரு தெளிவையும் தந்துவிட்டது.

    இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ முடிக்கவில்லை; ஒரு தெளிவோடு முடிக்கிறேன். சில உறவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிப்பதற்கல்ல; அவை நம்மை விழிப்படையச் செய்யவும், பாடம் கற்பிக்கவும், நம்மை மாற்றியமைக்கவுமே வருகின்றன.

    அதிக அறிவோடும், சுய விழிப்புணர்வோடும், எனக்குத் தகுதியான வாழ்க்கையை அமைப்பேன் என்ற உறுதியோடும் நான் முன்னோக்கிச் செல்கிறேன். இது ஒரு முடிவல்ல; இது ஒரு விடுதலை. ஒரு புதிய தொடக்கம். இனி நான் உருவாக்கும் அனைத்தும் சுயமரியாதை, அமைதி மற்றும் சிறந்த தேர்வுகளின் அடிப்படையில் அமையும் என்ற உறுதிமொழி. என்னிடம் கசப்பான உணர்வுகள் எதுவுமில்லை, கற்றுக்கொண்ட பாடங்களும், கண்ணியமும், மீண்டும் தொடங்குவதற்கான துணிச்சலும் மட்டுமே உள்ளன." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    நீண்ட காலமாகக் காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த மார்ச் 9, 2022 அன்று கோவாவில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது ராகுல் சாஹரின் வயது 22. தற்போது ராகுல் சாஹர், வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளார். 

    • ஹர்திக் பாண்டியாவின் காதலி மஹிகா ஷர்மா நேற்று தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
    • அக்டோபர் 2025-இல் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் காதலி மஹிகா ஷர்மா நேற்று தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 போட்டிகளுக்காக அகமதாபாத்தில் இருந்தபோது, ஹர்திக் பாண்ட்யா அங்குள்ள ஹோட்டலில் மஹிகாவின் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

    மஹிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் இளவரசி. 25 வருடங்களுக்கு முன்பு இந்த உலகத்திற்கு வந்ததற்கு நன்றி. எனக்குத் தெரிந்த மிகவும் அற்புதமான நபர் நீங்கள். நான் உன்னை நேசிக்கிறேன் என ஒரு நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

    இந்தப் பதிவிற்கு பதிலளித்த மஹிகா, "இந்த வருடத்தின் எனது சிறந்த பரிசு நீங்கள்தான்" என்று கூறினார்.

    இவர்கள் இருவரும் அக்டோபர் 2025-இல் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். முன்னதாக ஹர்திக் பாண்ட்யா பிரிட்டிஷ் பாடகி ஜாஸ்மின் வாலியாவுடன் (Jasmin Walia) இணைத்துப் பேசப்பட்டார், ஆனால் தற்போது அவர் மஹிகா ஷர்மாவுடன் காதலில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    • 20 ஓவரில் இரு அணிகளும் 49 போட்டியில் மோதியுள்ளன.
    • இதில் நியூசிலாந்து 23-ல், பாகிஸ்தான் 24-ல் வெற்றி பெற்றுள்ளன.

    கொழும்பு:

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.

    20 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் இன்றுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது. நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகியவை வெளியேற்றப்பட்டன.

    சூப்பர் 8 சுற்று நாளை (21-ந் தேதி) தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    குரூப் 1 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகியவையும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து நியூசிலாந்து , பாகிஸ்தான், இலங்கை ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    சூப்பர் 8 சுற்றில் நாளை இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் (குரூப் 2) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இந்த தொடரில் ஒரு போட்டியில் தோற்றன. சூப்பர் 8 சுற்றில் வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி சேப்பாக்கத்தில் நடந்த 3 போட்டியிலும் (ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா) வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் (7 விக்கெட்) தோற்றது.

    சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி நெதர்லாந்து (3 விக்கெட்), அமெரிக்கா (32 ரன்) நமீபியா (102 ரன்) ஆகியவற்றை வீழ்த்தியது. இந்தியாவிடம் 61 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இலங்கையில் தொடர்ந்து ஆடி வருவது அந்த அணிக்கு சாதகமாக சூழலாகும். அதே நேரத்தில் நியூசிலாந்து அணி எந்த ஆடுகளத்திலும் சிறப்பாக விளையாட கூடியது.

    20 ஓவரில் இரு அணிகளும் 49 போட்டியில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 23-ல், பாகிஸ்தான் 24-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை.

    • பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது என்பது தனது சொந்த முடிவு அல்ல.
    • அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதுகிறது.

    இந்த தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று கனடாவுடன் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஜொனாதன் ட்ராட் கண்ணீருடன் கூறியுள்ளார்.

    தனது ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-

    பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது என்பது தனது சொந்த முடிவு அல்ல. இது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு. இதற்கான நேரம் சரியானதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்.

    கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அணி அடைந்த முன்னேற்றத்தைக் கண்டு பெருமைப்படுகிறேன். குறிப்பாக வீரர்கள் களத்திற்கு வெளியிலும் முன்னேற்றம் கண்டு, அவர்களது குடும்பத்தின் பொருளாதார நிலையை மாற்றியதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    எனது எதிர்காலத் திட்டம் குறித்து தற்போதைக்குத் தெரியவில்லை. சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அடுத்தகட்ட முடிவை எடுக்கப்போகிறேன். எப்போதாவது ஒருமுறை தனது சொந்த நாடான இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்தால் அதை விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு இந்த உலகக் கோப்பை பயணம் மோசமாக அமைந்திருக்கிறது.
    • முழு உடல்தகுதியை எட்டாததால் தொடக்க ஆட்டத்தில் டிம் டேவிட்டும் விளையாடவில்லை.

    துபாய்:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஐ.சி.சி. இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுக்கு இந்த உலகக் கோப்பை பயணம் மோசமாக அமைந்திருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே கம்மின்ஸ், ஹேசில் வுட் காயத்தால் விலகினர். முழு உடல்தகுதியை எட்டாததால் தொடக்க ஆட்டத்தில் டிம் டேவிட்டும் விளையாடவில்லை. ஆனால் அவர்கள் ஜிம்பாப்வேயுடன் தோற்றபோதே, உலகக் கோப்பை வாய்ப்பு முடிந்து விட்டதாக நினைத்திருப்பார்கள்.

    முந்தைய ஐ.சி.சி. மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணிகளுடன் ஒப்பிடும்போது தற்போதைய ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றி தொனிக்குரிய ஒளிவட்டம் தெரியவில்லை. இது போன்ற உலக போட்டியை ஜெயிக்க வேண்டும் என்றால். உங்களது சிறந்த வீரர்களும், அனுபவ வீரர்களும் ஒருங்கிணைந்து முக்கியமான தருணங்களில் கைகொடுக்க வேண்டும். அதை செய்யவில்லை. கேமரூன் கிரீன், டிம் டேவிட் போன்ற முன்வரிசை பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்கள் எடுக்காததும் பின்னடைவுக்கு காரணமாகும்.

    2028-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் இருக்கமாட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவது போல் தோன்றுகிறது. அதே சமயம் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ் நிச்சயம் அணியில் இருப்பார்கள். மார்கஸ் ஸ்டோனிசின் இடமும் கேள்விக்குறி தான். ஆனால் உலகம் முழுவதும் நடக்கும் 20 ஓவர் லீக்கில் மட்டும் விளையாடும் அவரது ஆல்-ரவுண்டர் திறமைக்காக அணியில் தொடரலாம்.

    இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.

    • தொடக்கத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
    • அவரிடம் பலவிதமான ஷாட் திறமை இருப்பதால், அவர் களத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு ஆடலாம்.

    மும்பை:

    இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. உடல்நலக்குறைவால் ஒரு ஆட்டத்தில் ஆடவில்லை. மற்ற 3 ஆட்டங்களி லும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    இந்த நிலையில் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    இது குறித்து கவாஸ்கர் கூறியதாவது:-

    அபிஷேக் ஷர்மா அருமையான ஒரு வீரர். ஆனால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அவருக்கு அதிக அழுத்தத்தை கொடுப்பதாக நினைக்கிறேன். அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை அவர் சிறப்பாக தொடங்கி இருந்தால் இப்போது நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். அவரிடம் பலவிதமான ஷாட் திறமை இருப்பதால், அவர் களத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு ஆடலாம். இன்னிங்சின் முதல் பந்திலேயே சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்க முயற்சிக்க கூடாது. அதே நேரம், விரட்டுவதற்கு உகந்த பந்தாக வந்தால் அடிக்கலாம். பிரச்சினை இல்லை. ஆனால் வேண்டுமென்றே பெரிய ஷாட் ஆடக்கூடாது. முதலில் ரன் எடுத்து கணக்கை தொடங்க வேண்டும். அதற்கு 4 பந்து விரயமானாலும் பரவாயில்லை. அதை பிறகு அவரால் சரி செய்ய முடியும். தொடக்கத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

    ஒன்று அல்லது 2 ஓவர் நின்று விட்டால், அதன் பிறகு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். முதல் ரன் தான் முக்கியம். ஒரு ரன் எடுத்து விட்டாலே அனைத்தும் நன்றாக அமையும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு சென்றதில் இருந்து நாங்கள் கடும் துன்பங்களை அனுபவித்தோம்.
    • பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டி இருந்தது.

    கராச்சி:

    புரோ ஹாக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடிய பாகிஸ்தான் அணி அங்கு 4 ஆட் டங்களிலும் (ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 ஆட்டம்) படுதோல்வி அடைந்தது.

    தாயகம் திரும்பிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். 'ஆஸ்திரேலியாவுக்கு சென்றதில் இருந்து நாங்கள் கடும் துன்பங்களை அனுபவித்தோம். தங்கும் ஓட்டலுக்கு பாகிஸ்தான் சம்மேளனம் முன்கூட்டியே பணம் செலுத்தாததால் ஒரு மணி நேரம் ரோட்டில் பரிதவித்தோம். அதன் பிறகு ஏற்பாடு செய்து தங்கவைக்கவைக்கப்பட்ட இடத்தில் போதிய வசதிகள் கிடையாது.

    பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டி இருந்தது. துணிகளையும் நாங்களே துவைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம். பிறகு எப்படி போட்டியில் கவனம் செலுத்த முடியும்' என்று கூறிய ஷகீல் பட், பாகிஸ்தான் ஹாக்கி நிர்வாகத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெரும்பாலான வீரர்களுக்கு கடந்த ஓராண்டாக தினசரி படி வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ஹாக்கிக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக ஷகீல் பட்டுக்கு 2 ஆண்டு தடை விதித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்தி நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன் தனது பதவியையும் துறந்துள்ளார். ஹாக்கி சம்மேளன தலைமை புரவலரான பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்புக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள தாரிக் புக்தி, 'ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்தது பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் தான். அங்கு நடந்த நிகழ்வுக ளுக்கு அவர்களே பொறுப்பு. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கச்சனாவ் முதல் செட்டை 7-6 (7-3) என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதுகிறார்.

    • திடீரென மைதானத்தில் நுழைந்த தேனீக்கள் கூட்டம் வீரர்கள், நடுவர்களை தாக்கியது.
    • தேனீக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தின் சுக்லகஞ்ச் பகுதியில் உள்ள ராகுல் சப்ரு மைதானத்தில் இளையோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.

    நேற்று முன்தினம் நடந்த போட்டியின்போது கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா (65), நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, தேனீக்கள் கூட்டம் திடீரென மைதானத்தில் நுழைந்து வீரர்கள், நடுவர்களை தாக்கியது. தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர்.

    இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணிக் குப்தா மைதானத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார். அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின், மேல் சிகிச்சைக்காக கான்பூர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்தச் சம்பவத்தை உறுதி செய்த கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர், வீரர்களும் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

    மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் அம்பயர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • காலிறுதி சுற்றில் இத்தாலி வீரர் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் குடியரசின் ஜாகுப் மென்சிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மென்சிக் முதல் செட்டை 7-6 (7-3) என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட சின்னர் 2வது செட்டை 6-2 என எளிதில் வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மென்சிக் 6-3 என போராடி வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் சின்னர் தொடரில் இருந்து வெளியேறினார்.

    ×