என் மலர்
நீங்கள் தேடியது "கிரிக்கெட் அம்பயர்"
- திடீரென மைதானத்தில் நுழைந்த தேனீக்கள் கூட்டம் வீரர்கள், நடுவர்களை தாக்கியது.
- தேனீக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தின் சுக்லகஞ்ச் பகுதியில் உள்ள ராகுல் சப்ரு மைதானத்தில் இளையோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம் நடந்த போட்டியின்போது கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா (65), நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, தேனீக்கள் கூட்டம் திடீரென மைதானத்தில் நுழைந்து வீரர்கள், நடுவர்களை தாக்கியது. தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் மறைவிடம் நோக்கி ஓடினர்.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணிக் குப்தா மைதானத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார். அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின், மேல் சிகிச்சைக்காக கான்பூர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தை உறுதி செய்த கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர், வீரர்களும் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் அம்பயர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஒடிசாவின் கட்டாக் நகரில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
- இதில் நோ பால் கொடுத்த அம்பயர் குத்தி கொலை செய்யப்பட்டார்.
கட்டாக்:
ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ளூரைச் சேர்ந்த இரு அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் போட்டி நடத்த முடிவானது.
இதில் பெர்ஹாம்பூர் மற்றும் சங்கர்பூர் பகுதியைச் சேர்ந்த இரு அணிகள் பங்கேற்றன. போட்டி நடுவராக லக்கி ராவத் (22), என்பவர் செயல்பட்டார்.
பெர்ஹாம்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது அம்பயர் நோ பால் வழங்கினார். பொதுவாக நடுவர் வழங்கும் தீர்ப்பை வீரர்கள் ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் இப்போட்டியின்போது தவறான முடிவை வழங்கிவிட்டார் எனக்கூறி மோதல் தொடங்கியது.
நடுவரின் முடிவால் இரு அணியினரும் தகராறில் ஈடுபட்டனர். இந்த மோதல் முற்றியதில் பெர்ஹாம்பூர் அணியின் விளையாட்டு வீரரான ஜக்கா பேட்டால் லக்கியை தாக்கினார்.
மேலும் ஸ்முருதி ரஞ்சன் ராவத் என்ற மோனு என்பவர் ஆத்திரத்தில் மைதானத்தில் புகுந்து லக்கியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த லக்கி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த தாக்குதலில் தொடர்புடைய ஒருவரை கிராமவாசிகள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொரு நபரை பிடிப்பதற்கான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பயர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.






