என் மலர்
நீங்கள் தேடியது "Pakistan hockey team"
- இடைக்கால தலைவராக முகைதீன் அகமது வானி நியமிக்கப்பட்டுள்ளார்.
- கேப்டன் அமாத் ஷகீல் பட்டுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது.
லாகூர்:
புரோ ஹாக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடிய பாகிஸ்தான் அணி அங்கு நடந்த 4 ஆட்டங்களிலும் (ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 ஆட்டம்) படுதோல்வி அடைந்தது. போட்டி முடிந்து தாயகம் திரும்பிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தை கடுமையாக சாடினார்.
'ஆஸ்திரேலியா சென்ற நாங்கள் தங்குவதற்கு ஓட்டலுக்கு முன்பணம் கட்டாததால் சாலையில் சில மணி நேரம் தவித்தோம். அதன் பிறகு ஏற்பாடு செய்து தரப்பட்ட இடத்தில் போதிய வசதிகள் கிடையாது. பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டியது இருந்தது. துணிகளையும் நாங்களே துவைக்கும் நிலை ஏற்பட்டது. பிறகு எப்படி போட்டியில் முழு கவனம் செலுத்த முடியும்' என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் பாகிஸ்கான் ஹாக்கி சம்மேளன நிர்வாகக்கை முழுமையாக கலைக்க வேண்டும் என்று வலிறுத்திய அவர் பெரும்பாலான வீரர்களுக்கு கடந்த ஒரு ஆண்டாக தினசரி படி வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் புகழுக்கு களம் ஏற்படுத்தியதாக கேப்டன் ஷகில் பட்டுக்கு 2 ஆண்டு தடை விதித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்தி நடவடிக்கை எடுத்ததுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைமை புரவலரும், பிரதமருமான ஷபாஸ் ஷெரீப்புக்கு அனுப்பினார்.
இந்த நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு, இடைக்கால தலைவராக முகைதீன் அகமது வானி நியமிக்கப்பட்டுள்ளார். டைரக்டர் ஜெனரலாக முஸ்ரத்துல்லா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அத்துடன் கேப்டன் ஷகீல் பட் மீதான 2 ஆண்டு தடையை அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று இடைக்கால தலைவர் முகைதீன் அகமது வானி குறிப்பிட்டுள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு சென்றதில் இருந்து நாங்கள் கடும் துன்பங்களை அனுபவித்தோம்.
- பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டி இருந்தது.
கராச்சி:
புரோ ஹாக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடிய பாகிஸ்தான் அணி அங்கு 4 ஆட் டங்களிலும் (ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா 2 ஆட்டம்) படுதோல்வி அடைந்தது.
தாயகம் திரும்பிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். 'ஆஸ்திரேலியாவுக்கு சென்றதில் இருந்து நாங்கள் கடும் துன்பங்களை அனுபவித்தோம். தங்கும் ஓட்டலுக்கு பாகிஸ்தான் சம்மேளனம் முன்கூட்டியே பணம் செலுத்தாததால் ஒரு மணி நேரம் ரோட்டில் பரிதவித்தோம். அதன் பிறகு ஏற்பாடு செய்து தங்கவைக்கவைக்கப்பட்ட இடத்தில் போதிய வசதிகள் கிடையாது.
பாத்திரங்களை கழுவி சமையலறையை சுத்தம் செய்ய வேண்டி இருந்தது. துணிகளையும் நாங்களே துவைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம். பிறகு எப்படி போட்டியில் கவனம் செலுத்த முடியும்' என்று கூறிய ஷகீல் பட், பாகிஸ்தான் ஹாக்கி நிர்வாகத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெரும்பாலான வீரர்களுக்கு கடந்த ஓராண்டாக தினசரி படி வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஹாக்கிக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக ஷகீல் பட்டுக்கு 2 ஆண்டு தடை விதித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்தி நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன் தனது பதவியையும் துறந்துள்ளார். ஹாக்கி சம்மேளன தலைமை புரவலரான பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்புக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள தாரிக் புக்தி, 'ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்தது பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் தான். அங்கு நடந்த நிகழ்வுக ளுக்கு அவர்களே பொறுப்பு. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
- எங்களுக்கு அணி நிர்வாகம் ஹோட்டலை ஏற்பாடு செய்து தரவில்லை.
- படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகளை வீரர்களே சுத்தம் செய்தார்கள்.
பாகிஸ்தானின் ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடினர். சிட்னியில், அவர்கள் தங்குவதற்கு பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு ஹோட்டல் கட்டணங்களை செலுத்தாததால் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் வீரர்கள் சரியான தங்குமிடம் இல்லாமல் தவித்தனர்.
உள்ளூர் வசதியில் தங்குமிடத்தைக் கண்டுபிடித்தது. ஆனால் போட்டி நாட்களில்கூட, அவர்களே தங்களது பாத்திரங்களைக் கழுவ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். மேலும் தங்களது துணிகளை துவைக்க வேண்டிய சூழ்நிலைக்கும் ஆளாகினர்.
இதன் காரணமாக, நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் தங்களது நாடும் அணியும் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதி, ஹாக்கி அணியின் கேப்டனான அம்மாத் ஷகீல் பட், அப்படியெல்லாம் நடக்கவில்லை என உண்மையை மறைத்து பொய்யாகப் வீடியோ வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோவுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களின் பரிதாப நிலை வீடியோவாக வெளியாகி வைரலானது.
இதற்கிடையே தோல்வியுற்ற பாகிஸ்தான் அணி, தாயகம் திரும்பியது. ஆனால் அதை வரவேற்க எந்த அதிகாரிகளும் விமான நிலையம் செல்லவில்லை.
இதனால் கடுப்பான அவர் லாகூர் விமான நிலையத்தில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்களுக்கு அணி நிர்வாகம் ஹோட்டலை ஏற்பாடு செய்து தரவில்லை. அதனால் அனாதையாக 10-12 மணி நேரம் சுற்றித் திரிந்தோம். சரியான நேரத்தில் உணவும் வழங்கப்படவில்லை. வீரர்களே உணவைத் தயார் செய்துகொண்டனர். இரண்டு முதல் மூன்று மணி நேரம் பாத்திரங்களைக் கழுவினார்கள். படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகளை அவர்களே சுத்தம் செய்தார்கள். எங்களுக்கு சரியான ஓய்வு நேரம் இல்லை. வீரர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் பாகிஸ்தானுக்காக நாங்கள் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்? இது, விளையாட்டு வாரியத்தின் தவறா அல்லது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எங்கள் அணி நிர்வாகம் எங்களிடம் பலமுறை பொய் சொல்லியுள்ளது.
முன்னதாக, எனது நாட்டை அவதூறு செய்யக்கூடாது என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். அதற்காக இங்கு (ஆஸி.) எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், அணிக்கு எந்த அநீதியும் நடக்கவில்லை என்றும் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டேன். ஆனால் அது உண்மையல்ல. ஆனால் எங்கள் அணி குறித்து ஆஸ்திரேலியாவில் வெளிவந்த செய்திகள், வீடியோக்கள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் உண்மையே என கூறினார்.
- ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
- ஆசிய கோப்பை போட்டி 2026 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியாகும்.
சென்னை:
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சீனா, ஓமன், சீன தைபே ஆகிய 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
பகல்காம் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் இந்தியா வருவதற்காக பாகிஸ்தான் சீனியர் அணி 18 வீரர்கள் மற்றும் 7 துணை ஊழியர்களை கொண்ட குழு விசாவுக்கு விண்ணப்பித்தது. இதனால் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அணி போட்டியில் இருந்து விலகி உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசிய கோப்பையில் விளையாட இயலாது என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் ஆசிய ஹாக்கி கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு தயாராக இருந்த போதிலும் அவர்கள் இந்தியாவுக்கு வர மறுத்து விட்டனர். பாகிஸ்தானுக்கு பதிலாக வங்காள தேசத்தை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை போட்டி 2026 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியாகும்.
- எங்கள் அணி இந்தியாவில் விளையாடும்போது பாதுகாப்பு அபாயங்களைச் சந்திக்கும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம்.
- இந்தத் தொடருக்காக இந்தியாவிற்கு பயணம் செய்ய பாகிஸ்தான் வீரர்களும் ஆர்வம் காட்டவில்லை.
கராச்சி:
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் தங்கள் அணியை அனுப்புவது கடினம் என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திடம் தெரிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமே இதற்குக் காரணம் என்று அது கூறியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் தாரிக் புக்தி கூறியதாவது:-
தற்போதைய சூழலில், எங்கள் அணி இந்தியாவில் விளையாடும்போது பாதுகாப்பு அபாயங்களைச் சந்திக்கும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம். இந்தியாவில் எங்கள் வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும், போட்டியில் முழு கவனம் செலுத்துவதற்கும் என்ன உத்தரவாதம் இருக்கிறது என்பதைத் தெரிவிக்குமாறு நாங்கள் கேட்டுள்ளோம். இந்தத் தொடருக்காக இந்தியாவிற்கு பயணம் செய்ய பாகிஸ்தான் வீரர்களும் ஆர்வம் காட்டவில்லை.
என தாரிக் புக்தி கூறினார்.
இந்த ஆசிய கோப்பை, உலகக் கோப்பைக்கான நேரடித் தகுதிப் போட்டியாக இருப்பதால், இது ஒரு முக்கியமான தொடர். ஹாக்கி உலகில் சக்திவாய்ந்த அணியாக இருந்த பாகிஸ்தான், தற்போது உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒலிம்பிக்கின் ஹாக்கியில் பாகிஸ்தான் அணி 3 முறை தங்கம் வென்றுள்ளது.
- தற்போது பாகிஸ்தான் ஹாக்கி அணி கடும் நிதி சிக்கலில் இருந்து வருகிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அணியின் தேசிய விளையாட்டாக ஹாக்கி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இதுவரை ஒலிம்பிக் போட்டியில் 3 முறை தங்கப் பதக்கம் பெற்றுள்ளது. தற்போது பாகிஸ்தான் ஹாக்கி அணி கடும் நிதி சிக்கலில் இருந்து வருகிறது.
இதற்கிடையே, ஆசிய சாம்பியன் கோப்பை அடுத்த மாதம் சீனாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட கடனில் வாங்கிய டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்டி கூறுகையில், இந்த தேசிய விளையாட்டிற்கு உரிய அந்தஸ்தும் மரியாதையும் ஹாக்கிக்கு வழங்கப்படவில்லை. இப்போது தேசிய விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வளர்ந்து வரும் நிதிச் சிக்கல்களுக்கு மத்தியில், நாட்டின் ஹாக்கி திட்டத்தை புதுப்பிக்க சிறப்பு மானியம் வழங்கவேண்டும் என பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் வலியுறுத்தி உள்ளார்.






