என் மலர்
விளையாட்டு

இந்தியாவுக்கு எங்கள் அணியை அனுப்ப முடியாது: பாகிஸ்தான் ஹாக்கி அமைப்பு கடிதம்
- எங்கள் அணி இந்தியாவில் விளையாடும்போது பாதுகாப்பு அபாயங்களைச் சந்திக்கும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம்.
- இந்தத் தொடருக்காக இந்தியாவிற்கு பயணம் செய்ய பாகிஸ்தான் வீரர்களும் ஆர்வம் காட்டவில்லை.
கராச்சி:
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் தங்கள் அணியை அனுப்புவது கடினம் என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திடம் தெரிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமே இதற்குக் காரணம் என்று அது கூறியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் தாரிக் புக்தி கூறியதாவது:-
தற்போதைய சூழலில், எங்கள் அணி இந்தியாவில் விளையாடும்போது பாதுகாப்பு அபாயங்களைச் சந்திக்கும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம். இந்தியாவில் எங்கள் வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும், போட்டியில் முழு கவனம் செலுத்துவதற்கும் என்ன உத்தரவாதம் இருக்கிறது என்பதைத் தெரிவிக்குமாறு நாங்கள் கேட்டுள்ளோம். இந்தத் தொடருக்காக இந்தியாவிற்கு பயணம் செய்ய பாகிஸ்தான் வீரர்களும் ஆர்வம் காட்டவில்லை.
என தாரிக் புக்தி கூறினார்.
இந்த ஆசிய கோப்பை, உலகக் கோப்பைக்கான நேரடித் தகுதிப் போட்டியாக இருப்பதால், இது ஒரு முக்கியமான தொடர். ஹாக்கி உலகில் சக்திவாய்ந்த அணியாக இருந்த பாகிஸ்தான், தற்போது உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






