என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி- பாகிஸ்தான் அணி விலகல்
    X

    இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி- பாகிஸ்தான் அணி விலகல்

    • ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
    • ஆசிய கோப்பை போட்டி 2026 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியாகும்.

    சென்னை:

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடைபெறுகிறது.

    இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சீனா, ஓமன், சீன தைபே ஆகிய 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    பகல்காம் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் இந்தியா வருவதற்காக பாகிஸ்தான் சீனியர் அணி 18 வீரர்கள் மற்றும் 7 துணை ஊழியர்களை கொண்ட குழு விசாவுக்கு விண்ணப்பித்தது. இதனால் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அணி போட்டியில் இருந்து விலகி உள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசிய கோப்பையில் விளையாட இயலாது என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் ஆசிய ஹாக்கி கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.

    பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு தயாராக இருந்த போதிலும் அவர்கள் இந்தியாவுக்கு வர மறுத்து விட்டனர். பாகிஸ்தானுக்கு பதிலாக வங்காள தேசத்தை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆசிய கோப்பை போட்டி 2026 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியாகும்.

    Next Story
    ×