என் மலர்
விளையாட்டு
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப் 75 ரன்னில் அவுட் ஆனார்.
- இத்தாலி தரப்பில் பென் மனென்டி, கிரிஷான் கலுகமகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் - இத்தாலி அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிங், ஹோப் களமிறங்கினர். இதில் கிங் 4 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து ஹெட்மயர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஹோப்புடன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய ரோஸ்டன் 25 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரோவ்மன் பவல் 9 ரன்னில் நடையை கட்டினார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹோப் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 75 ரன்னில் அவுட் ஆனார். கடைசியில் ரூதர்ஃபோர்ட் மற்றும் மேத்யூ ஃபோர்டு அதிரடியாக விளையாட 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.
இத்தாலி தரப்பில் பென் மனென்டி, கிரிஷான் கலுகமகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- ஆஸ்திரேலியா ஏற்கனவே ‘சூப்பர் 8’ சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது.
- ஓமன் அணி தான் 3 மோதிய 3 ஆட்டங்களிலும் தோற்றது.
பல்லேகலே:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'லீக்' ஆட்டங்கள் நாளையுடன் முடிவடைகிறது. இந்தியா, இலங்கையில் கடந்த 7-ந்தேதி தொடங்கிய இந்த தொடரில் தினசரி 3 ஆட்டங்கள் நடைபெற்று வந்தது. நாளை ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே நடக்கிறது. பல்லேகலேவில் இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-ஓமன் அணிகள் மோதுகின்றன.
முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா ஏற்கனவே 'சூப்பர் 8' சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான அந்த அணி வெற்றியுடன் வெளியேறும் ஆர்வத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணி, அயர்லாந்தை (67 ரன்) மட்டும் வீழ்த்தியது. ஜிம்பாப்வேயிடம் 23 ரன்னிலும், இலங்கையிடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.
ஓமன் அணி தான் 3 மோதிய 3 ஆட்டங்களிலும் தோற்றது. ஜிம்பாப்வேயிடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும், இலங்கையிடம் 105 ரன் வித்தியாசத்திலும், அயர்லாந்திடம் 96 ரன் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது.
ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து ஓமன் முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட் மற்றும் 30 ரன்கள் விளாசினார்.
- உலகின் 6-வது ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா சாதனை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு விக்கெட் மற்றும் 30 ரன்கள் விளாசியதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 6000+ ரன்கள், 200+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்தார்.
இந்தச் சாதனையைச் செய்த உலகின் 6-வது ஆல்-ரவுண்டர் இவராவார். இவருக்கு முன்னதாக கீரன் பொல்லார்ட், ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் இந்த இரட்டை மைல்கல்லை எட்டியுள்ளனர்.
டி20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் 200 விக்கெட்டுகளைக் கடந்திருந்தாலும், 6000 ரன்கள் என்ற இலக்கை இன்னும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் வீரர்கள் ஜாம்பவான்களாக இருக்கலாம்.
- அவர்கள் யாரும் உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது இல்லை.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் முன்னேறி உள்ளது.
இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான முகமது யூசுப் மற்றும் ஷாகித் அப்ரிடி ஆகியோர் ஷதாப் கான், பாபர் அசாம் உட்பட சில மூத்த வீரர்களை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் முன்னாள் வீரர்களின் கருத்துகளுக்கு ஆல் ரவுண்டர் ஷதாப் கான் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முன்னாள் வீரர்கள் ஜாம்பவான்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது இல்லை. நாங்கள் (தற்போதைய அணி) 2021-ல் இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளோம்.
ஒரு மோசமான ஓவர் அல்லது ஒரு மோசமான போட்டியை வைத்து ஒட்டுமொத்தத் திறமையையும் விமர்சிப்பது சரியல்ல. டி20 கிரிக்கெட்டில் இது போன்ற ஏற்ற இறக்கங்கள் சகஜம்.
மேலும் சிறந்த உள்ளூர் வீரர்கள் பிஎஸ்எல் தொடரில் விளையாடுகிறார்கள் என்றும், அதை வைத்தே வீரர்களின் தரத்தை முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- போட்டியை நடத்தும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றுள்ளன.
- டி20 தரவரிசைப்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து ஆகிய அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
2028-ம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு 12 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 8 இடங்கள் பிராந்திய தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தகுதிபெறும்.
அதன்படி இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, இந்தியா ஆகிய அணிகளுடன் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றுள்ளன. டி20 தரவரிசைப்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து ஆகிய அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று முடிவுகளின் அடிப்படையில் இந்த அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
2028 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும். மேலே குறிப்பிட்டுள்ள 12 அணிகள் தவிர, மீதமுள்ள 8 இடங்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா-பசிபிக், மற்றும் அமெரிக்கா ஆகிய மண்டலங்களில் நடைபெறும் தகுதிச் சுற்றுகள் மூலம் தீர்மானிக்கப்படும்.
ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து தலா 2 அணிகளும், ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா-பசிபிக் பகுதியிலிருந்து இணைந்து 3 அணிகளும், அமெரிக்கா பகுதியிலிருந்து 1 அணியும் தகுதி பெறும்.
- இன்றுடன் டி20 உலகக் கோப்பையில் லீக் ஆட்டங்கள் முடிகின்றன.
- சூப்பர் 8 சுற்று போட்டிகள் வரும் 21-ம் தேதி தொடங்குகின்றன.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை தொடரின் 36-வது லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஷிவம் துபே அதிரடியாக ஆடி 31 பந்தில் 66 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய நெதர்லாந்து 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 17 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷிவம் துபேவுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஏ பிரிவில் இந்திய அணி தான் ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் முதல் இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.
இந்திய அணியுடன் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளன.
மற்றொரு பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.
சூப்பர் 8 பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, குரோசியாவின் அண்டோனியா ருசிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட குரோசிய வீராங்கனை 2வது செட்டை 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் குரோசிய வீராங்கனை 1-0 என முன்னிலை பெற்றிருந்தபோது ரிபாகினா காயத்தால் விலகினார். இதனால் குரோசிய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.
- முதலில் பேட் செய்த கர்நாடக அணி முதல் இன்னிங்கில் 736 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அந்த அணியில் தேவ்தத் படிக்கல் இரட்டை சதமும், கே எல் ராகுல், ஸ்மரன் ரவிசந்திரன் சதமடித்தனர்.
லக்னோ:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
லக்னோவில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்ட், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கே எல் ராகுல்-தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். கே.எல்.ராகுல் 141 ரன்னும், தேவ்தத் படிக்கல் இரட்டை சதமடித்து 232 ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய ஸ்மரன் ரவிசந்திரனும் சதமடித்து 135 ரன்னில் வெளியேறினார். கருண் நாயர், கிருதிக் கிருஷ்ணா தலா 60 ரன்னும், வித்யாதர் பாட்டீல் 54 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில், கர்நாடக அணி முதல் இன்னிங்கில் 736 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
உத்தரகாண்ட் அணி சார்பில் ஆதித்ய ராவத் 4 விக்கெட்டும், மயங்க் மிஸ்ரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் உத்தரகாண்ட் அணி 5 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. லக்ஷய் ராஜேஷ் அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. லக்ஷய் ராஜேஷ் 58 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்களும் விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஆதித்யா ராவத் அதிரடியாக ஆடி 38 பந்தில் 45 ரன் எடுத்தார்.
இறுதியில், உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கர்நாடக அணி சார்பில் வித்யாதர் பாட்டீல், விஜயகுமார் வைஷாக் தலா 3 விக்கெட்டும், ஷ்ரேயஸ் கோபால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 503 ரன்கள் முன்னிலை பெற்ற கர்நாடக அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஸ்மரன் ரவிசந்திரன் இந்த இன்னிங்சிலும் பொறுப்புடன் ஆடி சதமடித்து 127 ரன்னில் அவுட்டானார். கிருதிக் கிருஷ்ணா 52 ரன்னில் வெளியேறினார்.
நான்காம் நாள் முடிவில் கர்நாடக அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கர்நாடக அணி இதுவரை 802 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- 2வது சுற்றில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது.
- ஷிவம் துபே அதிரடியாக ஆடி 31 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார்.
அகமதாபாத்:
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஷிவம் துபெ அதிரடியாக
ஆடி 31 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 34 ரன்னும், திலக் வர்மா 31 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும் எடுத்தனர்.
நெதர்லாந்து சார்பில் வான் பீக் 3 விக்கெட்டும், ஆர்யன் தத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. பாஸ் டி லீட் 33 ரன்னும், ஜாக் லயன் 26 ரன்னும், மைக்கேல் லெவிட் 24 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா 4வது வெற்றியைப் பதிவு செய்தது
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், ஷிவம் துபெ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- 2வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கடந்த வாரம் நடைபெற்ற ரோட்டர்டாம் டென்னிஸ் தொடரிலும் மெத்வதேவ் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எங்களுக்கு அணி நிர்வாகம் ஹோட்டலை ஏற்பாடு செய்து தரவில்லை.
- படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகளை வீரர்களே சுத்தம் செய்தார்கள்.
பாகிஸ்தானின் ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடினர். சிட்னியில், அவர்கள் தங்குவதற்கு பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு ஹோட்டல் கட்டணங்களை செலுத்தாததால் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் வீரர்கள் சரியான தங்குமிடம் இல்லாமல் தவித்தனர்.
உள்ளூர் வசதியில் தங்குமிடத்தைக் கண்டுபிடித்தது. ஆனால் போட்டி நாட்களில்கூட, அவர்களே தங்களது பாத்திரங்களைக் கழுவ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். மேலும் தங்களது துணிகளை துவைக்க வேண்டிய சூழ்நிலைக்கும் ஆளாகினர்.
இதன் காரணமாக, நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் தங்களது நாடும் அணியும் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதி, ஹாக்கி அணியின் கேப்டனான அம்மாத் ஷகீல் பட், அப்படியெல்லாம் நடக்கவில்லை என உண்மையை மறைத்து பொய்யாகப் வீடியோ வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோவுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களின் பரிதாப நிலை வீடியோவாக வெளியாகி வைரலானது.
இதற்கிடையே தோல்வியுற்ற பாகிஸ்தான் அணி, தாயகம் திரும்பியது. ஆனால் அதை வரவேற்க எந்த அதிகாரிகளும் விமான நிலையம் செல்லவில்லை.
இதனால் கடுப்பான அவர் லாகூர் விமான நிலையத்தில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்களுக்கு அணி நிர்வாகம் ஹோட்டலை ஏற்பாடு செய்து தரவில்லை. அதனால் அனாதையாக 10-12 மணி நேரம் சுற்றித் திரிந்தோம். சரியான நேரத்தில் உணவும் வழங்கப்படவில்லை. வீரர்களே உணவைத் தயார் செய்துகொண்டனர். இரண்டு முதல் மூன்று மணி நேரம் பாத்திரங்களைக் கழுவினார்கள். படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகளை அவர்களே சுத்தம் செய்தார்கள். எங்களுக்கு சரியான ஓய்வு நேரம் இல்லை. வீரர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் பாகிஸ்தானுக்காக நாங்கள் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்? இது, விளையாட்டு வாரியத்தின் தவறா அல்லது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எங்கள் அணி நிர்வாகம் எங்களிடம் பலமுறை பொய் சொல்லியுள்ளது.
முன்னதாக, எனது நாட்டை அவதூறு செய்யக்கூடாது என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். அதற்காக இங்கு (ஆஸி.) எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், அணிக்கு எந்த அநீதியும் நடக்கவில்லை என்றும் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டேன். ஆனால் அது உண்மையல்ல. ஆனால் எங்கள் அணி குறித்து ஆஸ்திரேலியாவில் வெளிவந்த செய்திகள், வீடியோக்கள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் உண்மையே என கூறினார்.






