என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    கத்தார் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
    X

    கத்தார் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • 2வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    கடந்த வாரம் நடைபெற்ற ரோட்டர்டாம் டென்னிஸ் தொடரிலும் மெத்வதேவ் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×