என் மலர்
விளையாட்டு
- 2004-ம் ஆண்டு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமானவர் தோனி.
- 2005-ல் இருந்து தோனி குறித்து ஒரு வதந்தி பரவியது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஆட்டம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வரும் 6 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருநாளில் தோனி 5 லிட்டர் பால் குடிக்கிறார் என்ற வதந்தி தொடர்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பதில் அளித்துள்ளார்.
2004-ம் ஆண்டு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமானவர் தோனி. அவரது அதிரடியான பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வேகமாக ஓடி ரன்களை குவித்து வந்தார்.
அப்போது தோனி ஒருநாளில் 5 லிட்டர் பால் குடிப்பதே அவரின் பிட்னஸ் மற்றும் வலிமைக்கு காரணம் என்று சில தகவல்கள் வெளியாகியது. இதனை தோனி ஒருநாளும் மிஸ் செய்ய மாட்டார் என்றும் கூறப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக தோனியிடமே கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு தோனி அளித்த பதில், எனக்கு பால் குடிக்கும் பழக்கம் உள்ளது உண்மைதான். ஆனால் ஒருநாளுக்கே மொத்தமாக ஒரு லிட்டர் அளவிற்கு தான் பால் குடிப்பேன் என்று நினைக்கிறேன். கூடுதலாக 4 லிட்டர் என்பது கொஞ்சம் ஓவர்தான். சராசரி மனிதர் தினமும் 5 லிட்டர் பால் குடிப்பது எளிதல்ல என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வரும் இந்த வதந்திக்கு தோனி முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
- தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு உதவித்தொகை செய்து வருகிறது.
- ஒருவருக்கு தலா 70 ஆயிரம் வீதம் 7 லட்சம் நிதியுதவி வழங்கினார் துபே.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 39 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதல் 4 இடங்களில் குஜராத், டெல்லி, ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் உள்ளன. இந்த தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 தோல்வி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதனால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல எஞ்சிய 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 70 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் வருடாந்திரம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு உதவித்தொகை செய்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் 10 வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள அந்த சங்கம் தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி அளிக்கிறது.
அதன்படி தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TNSJA) விருதுகள் மற்றும் உதவித்தொகை விழாவில், இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஒருவருக்கு தலா 70 ஆயிரம் வீதம் உள்பட 7 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இது குறித்து துபே கூறியதாவது:-
சிஎஸ்கே அணி ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு சென்ற போது டாக்டர் பாபா அவர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்வது பற்றி சொன்னார். இது இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடியது. இந்த சிறிய உதவித்தொகை அவர்கள் நாட்டுக்காக பெரியளவு பாடுபடுவதற்கான உதவியைச் செய்யும்.
என்று கூறினார்.
- லக்னோ அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 பள்ளிகளை பெற்றுள்ளது.
- டெல்லி அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
லக்னோ அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 பள்ளிகளை பெற்றுள்ளது. அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியும் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 தோல்வி) வலுவான நிலையில் காணப்படுகிறது.
டெல்லிக்கு எதிராக ஏற்கனவே மோதிய லீக்கில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்க லக்னோ தீவிரம் காட்டுவதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
- ஒரு வீரரைப் பற்றி சரியான தகவல்களைப் பகிர வேண்டும். இதுதான் இங்கே பிரச்சினையாக உள்ளது.
- சிலர் பொறாமையின் காரணமாக சில வீரர்களின் வாழ்க்கையை முடித்துவிடப் பார்க்கிறார்கள்.
ஐபிஎல் தொடரிலும், இந்திய டி20 அணியிலும் அதிரடி பேட்ஸ்மேனாக அபிஷேக் ஷர்மா இருந்து வருகிறார். அவரை தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்து வளர்த்து விட்டவர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்.
இந்நிலையில் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் அபிஷேக் ஷர்மா ஒரு பவுலர் எனக் கூறி அவரது பேட்டிங் திறமையை மறைக்கப் பார்த்ததாக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்த யோக்ராஜ் சிங் கூறியதாவது:-
அபிஷேக் ஷர்மா அப்போது இரவு நேரப் பார்ட்டிகள், பெண் தோழிகள் என்று இருந்தார். யுவராஜ் சிங் அபிஷேக்கின் தந்தையிடம் அபிஷேக் ஷர்மாவை வீட்டிலேயே அடைத்து வையுங்கள் என்றார். ஆனால், அவரது தந்தையால் அபிஷேக் ஷர்மாவை கையாள முடியவில்லை. அதன் பின்னர் யுவராஜ் சிங் தனது கட்டுப்பாட்டில் அபிஷேக் ஷர்மாவை கொண்டு வந்தார்.
அதன்பிறகு பஞ்சாப் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் அபிஷேக்கின் திறமையை மறைக்க முயன்றனர். நாங்கள் அபிஷேக் ஷர்மாவின் செயல்பாடுகளைப் பற்றி பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திலும் அதன் பயிற்சியாளர்களிடமும் விசாரித்தோம். அப்போது அவர்கள் இவர் ஒரு பந்துவீச்சாளர். இவர் பந்துவீச மட்டும் தான் செய்வார்.
உடனே யுவராஜ் சிங் அவரது ரெக்கார்டை எடுத்து காட்டுங்கள் என்றார். அந்த ரெக்கார்டை எடுத்த பார்த்த போது, அவர் அப்போதே 24 சதங்களை அடித்திருந்தார். ஏன் தவறான தகவல்களை கொடுக்கிறீர்கள்? இந்த பையன் 24 சதங்களை அடித்து இருக்கிறான் என்றார். இந்த சம்பவம் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
ஒரு வீரரைப் பற்றி சரியான தகவல்களைப் பகிர வேண்டும். இதுதான் இங்கே பிரச்சினையாக உள்ளது. சிலர் பொறாமையின் காரணமாக சில வீரர்களின் வாழ்க்கையை முடித்துவிடப் பார்க்கிறார்கள்.
என்று யோக்ராஜ் சிங் கூறினார்.
- சாய் கிஷோரும் நானும் போட்டிகளுக்கு முன்பு நிறைய பேசிக் கொள்வோம்.
- நானும் அவரைப் போல பந்து வீச முயற்சிக்கிறேன்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் ரஷித் கான் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு விக்கெட் எடுக்க கூட முடியாமல் திணறினார். மேலும் அதிக ரன்களையும் விட்டுக்கொடுத்தார். நேற்றைய போட்டியில் ரஷித் கான் 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற சாய் கிஷோரின் அறிவையும் பெற்றுக் கொண்டேன் என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாய் கிஷோரும் நானும் போட்டிகளுக்கு முன்பு நிறைய பேசிக் கொள்வோம். அவரிடம் நான் பிட்சுகளை மட்டும் நம்பி நாம் விளையாட முடியாது. பிட்சில் சரியான இடத்தில் நாம் பந்தை பிட்ச்செய்து வீச வேண்டும் என்று சொன்னேன்.
அவர் பந்துவீசும் விதம் மற்றும் பந்துவீச்சு மாறுபாடுகளை நான் விரும்புகிறேன். அவரிடம் இருந்து அவற்றை கற்றுக் கொள்கிறேன். நானும் அவரைப் போல பந்து வீச முயற்சிக்கிறேன்.
என்னுடைய அனுபவத்தை நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அதேபோல, இந்திய ஆடுகளங்களில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற சாய் கிஷோரின் அறிவையும் நான் பெற்றுக் கொண்டேன்.
என்று ரஷித் கான் கூறினார்.
- பீல்டிங்கை தொடர்ந்து மாற்றுவதோடு, பவுலர்களுடன் தொடர் ஆலோசனையில் கில் இருந்து வருகிறார்.
- கேகேஆர் அணிக்காக ஆடிய போது, சுப்மன் கில் வளர்ந்து வரும் வீரராகவே இருந்தார்.
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 55 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 90 ரன்களை விளாசி இருக்கிறார். மொத்தமாக இந்த சீசனில் 8 இன்னிங்ஸில் ஆடியுள்ள சுப்மன் கில் 3 அரைசதம் உட்பட 305 ரன்களை விளாசி இருக்கிறார்.
கடந்த சீசனை போல் அல்லாமல் இந்த சீசனில் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய குஜராத் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் சுப்மன் கில்லும் களத்தில் மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார்.
குஜராத் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள 6 போட்டிகளில் 2-ல் வென்றால் கூட குஜராத் அணி எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்நிலையில் கேப்டசியில் சுப்மன் கில் சிறப்பாக செயல்படுவதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் நிதானமாக நேரம் எடுத்து அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்தார். தற்போது சுப்மன் கில்லால் அதிரடியான ஷாட்களை ஆட முடிகிறது. அதேபோல் டாட் பால் சதவிகிதத்தையும் சுப்மன் கில் குறைத்துள்ளார். சுப்மன் கில்லால் எளிதாக ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்ய முடிகிறது.
அவரிடம் இருக்கும் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், சக வீரர்களுடன் அவர் தனது தேவையை சிறப்பாக சொல்வதுதான். அவர் களத்திற்கு வெளியிலும் நல்ல உறவுடன் இருப்பதே குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறது. பீல்டிங்கை தொடர்ந்து மாற்றுவதோடு, பவுலர்களுடன் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார்.
கேகேஆர் அணிக்காக ஆடிய போது, சுப்மன் கில் வளர்ந்து வரும் வீரராகவே இருந்தார். ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட்டின் இளவரசனாக திரும்பி இருக்கிறார். இந்த இடம் அவருக்கு ஸ்பெஷலானது.
என்று ரெய்னா கூறினார்.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஹோல்ஜர் ரூனே சாம்பியன் பட்டம் வென்றார்.
- இதையடுத்து தரவரிசையில் டாப் 10-ம் இடம் பிடித்தார் ஹோல்ஜர் ரூனே.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 20-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் டென்மார்க்கைச் சேர்ந்த ஹோல்ஜர் ரூனே சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
அதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தில் தொடருகிறார்.
பார்சிலோனா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது இடத்துக்கு முன்னேறினார். கார்லோஸ் அல்காரஸ் ஒரு இடம் சரிந்து 3வது இடத்தில் உள்ளார்.
அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
ரஷிய வீரரான மெத்வதேவ் ஒரு இடம் சரிந்து 10-வது இடம் பிடித்துள்ளார்.
- சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (4 புள்ளி), எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் (16 புள்ளி) மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒரு வேளை 5ல் மட்டும் வென்றால் (14), மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.
இந்நிலையில், சி.எஸ்.கே அணி நிச்சயம் மீண்டு வரும் என்று அந்த அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்சியில் பேசிய காசி விஸ்வநாதன், "நடப்பு சீசனில் சி.எஸ்.கே. அணியின் ஆட்டத்தால் நீங்கள் அதிருப்தியாக இருப்பீர்கள். ஆனால் விளையாட்டில் இது சகஜம். இப்போது நன்றாக விளையாடவில்லை என்பது உண்மைதான். நிச்சயம் மீண்டு வருவோம். வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எங்கள் பாய்ஸ் உறுதியாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
- ஐதராபாத் அணியுடன் மோதுவதற்காக மும்பை அணி வீரர்கள் ஐதராபாத் வந்தடைந்தனர்.
- வில் ஜேக்ஸ், திலக் வர்மா ஆகியோர் சூப்பர் மேன் உடையணிந்து வந்தது கவனம் ஈர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 176 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுவதற்காக மும்பை அணி வீரர்கள் ஐதராபாத் வந்தடைந்தனர்.
இந்நிலையில், ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களான வில் ஜேக்ஸ், திலக் வர்மா ஆகியோர் சூப்பர் மேன் உடையணிந்து வந்தது கவனம் ஈர்த்துள்ளது.
தாமதமாக வரும் வீரர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவ்வாறு நூதன தண்டனை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
- காயம் காரணமாக கடந்த 4 ஆட்டங்களை தவறவிட்ட பாப் டு பிளிஸ்சிஸ் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.
- டெல்லிக்கு எதிராக ஏற்கனவே மோதிய லீக்கில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று இரவு நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
லக்னோ அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 பள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (368 ரன்), மிட்செல் மார்ஷ் (299), மார்க்ரம் (274), ஆயுஷ் பதோனி சூப்பர் பார்மில் இருக்கின்றனர். கேப்டன் ரிஷப் பண்டும் (106ரன்) மிரட்டினால் பேட்டிங் மேலும் வலுவடையும். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் பலம் சேர்க்கின்றனர்.
அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியும் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 தோல்வி) வலுவான நிலையில் காணப்படுகிறது. பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (266 ரன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல், அஷூதோஷ் ஷர்மா, கருண் நாயர் நம்பிக்கை அளிக்கின்றனர். காயம் காரணமாக கடந்த 4 ஆட்டங்களை தவறவிட்ட பாப் டு பிளிஸ்சிஸ் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. லக்னோ அணியில் இருந்து பிரிந்த பிறகு அந்த அணிக்கு எதிராக லோகேஷ் ராகுல் களம் காணும் முதல் ஆட்டம் இதுவாகும். இதனால் அவரது பேட்டிங் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
டெல்லிக்கு எதிராக ஏற்கனவே மோதிய லீக்கில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்க லக்னோ தீவிரம் காட்டுவதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார்.
- நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார்
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார்.
நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சனின் ஆட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நீங்க விளையாடுற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு சாய் சுதர்சன். இந்திய ஜெர்சியில் உங்களின் அபார திறமையை காண காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- 6 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- அஸ்வின் விளையாடிய கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
மும்பையில் நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 6 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய அஸ்வின் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணியின் முன்னாள் வீரர் கடுமையாக ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "அஸ்வின் என்ன நினைத்து கொண்டிருக்கிறார். அவர் 2 விக்கெட் எடுத்திருந்தால் போட்டியை வென்றிருக்கலாம். ஆனால் அஷ்வின் என்ன செய்கிறார்? அவர் ரன்களை கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் பந்துவீசுகிறார். அவர் விக்கெட்டுகளை எடுக்க விரும்பவில்லை. மும்பை அணி வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சை சிங்கிள்ஸ் எடுத்து புத்திசாலித்தனமாக விளையாடினார்கள். போட்டியின் சூழ்நிலையை அவர் புரிந்து கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.
அஸ்வின் விளையாடிய கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






