என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூப்பர்மேன்"

    • ஐதராபாத் அணியுடன் மோதுவதற்காக மும்பை அணி வீரர்கள் ஐதராபாத் வந்தடைந்தனர்.
    • வில் ஜேக்ஸ், திலக் வர்மா ஆகியோர் சூப்பர் மேன் உடையணிந்து வந்தது கவனம் ஈர்த்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 176 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுவதற்காக மும்பை அணி வீரர்கள் ஐதராபாத் வந்தடைந்தனர்.

    இந்நிலையில், ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களான வில் ஜேக்ஸ், திலக் வர்மா ஆகியோர் சூப்பர் மேன் உடையணிந்து வந்தது கவனம் ஈர்த்துள்ளது.

    தாமதமாக வரும் வீரர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவ்வாறு நூதன தண்டனை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    சூப்பர்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்த மார்கட் கிட்டர் 69 வயதில் இன்று காலமானார். #Superman #MargotKidder #RipMargotKidder
    நியூயார்க்:

    பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் கிட்டர் (69). இவர் 1968ல் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், 1978ல் வெளியான சூப்பர்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின்னரே இவர் உலகம் முழுவதும் பிரபலமானார்.

    சூப்பர்மேன் நடித்த அனைத்து பாகங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி நெய்பர்ஹுட். இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. மேலும், இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.



    இந்நிலையில், மார்கட் கிட்டர் நேற்று அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறப்புக்கான காரணம் வெளியாகவில்லை.

    68 வயது வரை நடிப்பில் கவனம் செலுத்தி வந்த மார்கட் கிட்டருக்கு ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #Superman #MargotKidder #RipMargotKidder
    ×