என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

CSK மீது அதிருப்தியாக இருப்பீர்கள்... நிச்சயம் மீண்டு வருவோம் - காசி விஸ்வநாதன் நம்பிக்கை
- சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (4 புள்ளி), எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் (16 புள்ளி) மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒரு வேளை 5ல் மட்டும் வென்றால் (14), மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.
இந்நிலையில், சி.எஸ்.கே அணி நிச்சயம் மீண்டு வரும் என்று அந்த அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்சியில் பேசிய காசி விஸ்வநாதன், "நடப்பு சீசனில் சி.எஸ்.கே. அணியின் ஆட்டத்தால் நீங்கள் அதிருப்தியாக இருப்பீர்கள். ஆனால் விளையாட்டில் இது சகஜம். இப்போது நன்றாக விளையாடவில்லை என்பது உண்மைதான். நிச்சயம் மீண்டு வருவோம். வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எங்கள் பாய்ஸ் உறுதியாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.






