என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    விக்கெட்டுகளை எடுக்க அஸ்வின் விரும்பவில்லை - கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்த்
    X

    விக்கெட்டுகளை எடுக்க அஸ்வின் விரும்பவில்லை - கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்த்

    • 6 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
    • அஸ்வின் விளையாடிய கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

    மும்பையில் நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 6 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய அஸ்வின் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணியின் முன்னாள் வீரர் கடுமையாக ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

    தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "அஸ்வின் என்ன நினைத்து கொண்டிருக்கிறார். அவர் 2 விக்கெட் எடுத்திருந்தால் போட்டியை வென்றிருக்கலாம். ஆனால் அஷ்வின் என்ன செய்கிறார்? அவர் ரன்களை கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் பந்துவீசுகிறார். அவர் விக்கெட்டுகளை எடுக்க விரும்பவில்லை. மும்பை அணி வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சை சிங்கிள்ஸ் எடுத்து புத்திசாலித்தனமாக விளையாடினார்கள். போட்டியின் சூழ்நிலையை அவர் புரிந்து கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.

    அஸ்வின் விளையாடிய கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×