என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வீடியோ: உங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட வதந்தி என்ன? தோனி கூறிய சுவாரஸ்ய பதில்
    X

    வீடியோ: உங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட வதந்தி என்ன? தோனி கூறிய சுவாரஸ்ய பதில்

    • 2004-ம் ஆண்டு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமானவர் தோனி.
    • 2005-ல் இருந்து தோனி குறித்து ஒரு வதந்தி பரவியது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஆட்டம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வரும் 6 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஒருநாளில் தோனி 5 லிட்டர் பால் குடிக்கிறார் என்ற வதந்தி தொடர்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பதில் அளித்துள்ளார்.

    2004-ம் ஆண்டு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமானவர் தோனி. அவரது அதிரடியான பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வேகமாக ஓடி ரன்களை குவித்து வந்தார்.

    அப்போது தோனி ஒருநாளில் 5 லிட்டர் பால் குடிப்பதே அவரின் பிட்னஸ் மற்றும் வலிமைக்கு காரணம் என்று சில தகவல்கள் வெளியாகியது. இதனை தோனி ஒருநாளும் மிஸ் செய்ய மாட்டார் என்றும் கூறப்பட்டது.

    இந்த விஷயம் தொடர்பாக தோனியிடமே கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு தோனி அளித்த பதில், எனக்கு பால் குடிக்கும் பழக்கம் உள்ளது உண்மைதான். ஆனால் ஒருநாளுக்கே மொத்தமாக ஒரு லிட்டர் அளவிற்கு தான் பால் குடிப்பேன் என்று நினைக்கிறேன். கூடுதலாக 4 லிட்டர் என்பது கொஞ்சம் ஓவர்தான். சராசரி மனிதர் தினமும் 5 லிட்டர் பால் குடிப்பது எளிதல்ல என்று தெரிவித்துள்ளார்.

    சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வரும் இந்த வதந்திக்கு தோனி முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

    Next Story
    ×