
இதனால் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடாததால் மீண்டும் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை.
ஆனால் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார். இதனால் ஸ்மித்திற்கும் (131) விராட் கோலிக்கும் (128) இடையில் மூன்று புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஸ்மித் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் 131 புள்ளிகளில் இருந்து 8 புள்ளிகளை இழந்து 123 புள்ளிகள் பெற்றார். விராட் கோலி 128 புள்ளிகளில் இருந்ததால் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்த டேவிட் வார்னர் 12 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். கேன் வில்லியம்சன் 877 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். அதேபோல் புஜாரா 791 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
ரகானே 759 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஜோ ரூட் 4-வது இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.