search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரேட்டா தன்பெர்க், ரோகித் சர்மா
    X
    கிரேட்டா தன்பெர்க், ரோகித் சர்மா

    எவ்வளவு தைரியம் உங்களுக்கு?: உலகத் தலைவர்களை நோக்கி கேட்ட சிறுமிக்கு ரோகித் சர்மா பாராட்டு

    ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை பார்த்து எவ்வளவு தைரியம் உங்களுக்கு? எனக்கேட்ட சிறுமிக்கு ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
    அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற கிரேட்டா தன்பெர்க் என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி (பருவநிலை மாற்ற ஆர்வலர்) பேசுகையில் ‘‘இது எல்லாம் தவறு. நான் இங்கு இருக்கக் கூடாது. இந்த பெருங்கடலின் மறுபக்கத்தில் இருக்கும் ஊரில் அமைந்துள்ள பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும்.

    ஆனால், நீங்கள் நம்பிக்கையோடு இளைஞர்களிடம் வருகிறீர்கள். உங்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் களவாடி விட்டீர்கள்’’ என்றார்.

    சிறுமியின் இந்த பேச்சு உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மாவும் பாராட்டியுள்ளார்.

    ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நமது உலகத்தின் பாதுகாப்பை நம் குழந்தைகளுக்கு விட்டுச்செல்வது முற்றிலும் நியாயமற்றது. கிரேட்டா தன்பெர்க் நீங்கள் ஒரு உத்வேகம். தற்போது இந்த விவகாரத்தில் எந்த சாக்குபோக்கும் இல்லை. வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகத்தை விட்டுச் செல்ல கடமைப்பட்டுள்ளோம். தற்போது மாற்றத்திற்கான நேரம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×