search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாசிர் ஷா
    X
    யாசிர் ஷா

    உள்நாட்டு பயிற்சியாளர்களுடன் பணியாற்றுவதுதான் சிறந்ததாக இருக்கும்: யாசிர் ஷா

    வெளிநாட்டு பயிற்சியாளர்களை விட உள்நாட்டு பயிற்சியாளர்களுடன் பணியாற்றுவது சிறந்ததாக இருக்கும் என பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா. 33 வயதானாலும் யாசிர் ஷா டெஸ்ட் அணியின் முதன்மை பந்து வீச்சாளராக உள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா-உல்-ஹக், பந்து வீச்சு பயிற்சியாளராக வக்கார் யூனிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை விட உள்நாட்டு பயிற்சியாளர்களுடன் பணிபுரிவது சிறந்ததாக இருக்கும் என யாசிர் ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து யாசிர் ஷா கூறுகையில் ‘‘உள்ளூர் பயிற்சியாளர்களுடன் பணிபுரியும்போது, எனக்கு அது மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் உதவி புரிந்துள்ளனர்.

    வக்கார் யூனிஸ் மற்றும் முஷ்டாக் அகமது ஆகியோர் பயிற்சியாளராக இருக்கும்போது எனக்கு அதிக அளவில் உதவியாக இருந்தனர். வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் பணிபுரியும்போது, கம்யூனிஸ்கேன் விவகாரத்தில் சற்று கடினமாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×