search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாசிர் ஷா"

    டெஸ்ட் தொடரில் வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தானை 49 வருடத்திற்குப் பிறகு வீழ்த்தி நியூசிலாந்து சாதனைப் படைத்துள்ளது. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வந்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேன் வில்லியம்சன் (139), நிக்கோல்ஸ் (126 அவுட் இல்லை) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    நியூசிலாந்து 279 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இன்றைய கடைசி நாளில் 81 ஓவர்கள் மீதம் இருந்தது.

    இமாம்-உல்-ஹக், முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹபீஸ் 8 ரன்னிலும், இமாம்-உல்-ஹக் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த அசார் அலி (5), ஹரிஸ் சோகைல் (9), ஆசாத் ஷபிக் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

    இதனால் பாகிஸ்தான் 55 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அடுத்து வந்த பாபர் ஆசம் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். மற்ற வீரர்களான சர்பிராஸ் அகமது (28), பிலால் ஆசிப் (12), யாசிர் ஷா (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


    ஹபீஸ் க்ளீன் போல்டாகிய காட்சி

    அரைசதம் அடித்த பாபர் ஆசம் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் 56.1 ஓவரில் 156 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

    நியூசிலாந்து கடந்த 1969-ம் ஆண்டு பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதன்பின் தற்போது 49 ஆண்டுகள் கழித்து நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது.
    அபு தாபி டெஸ்டில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியதன் மூலம் 33 இன்னிங்சில் 200 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 82 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார் யாசிர் ஷா.
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய யாசிர் ஷா, 4-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    2-வது விக்கெட்டை வீழ்த்தும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுக்களை பதிவு செய்தார். யாசிர் ஷா 33 போட்டியிலேயே 200 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 82 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார்.

    இதற்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான கிரிம்மெட் 1936-ம் ஆண்டு 36 போட்டியில் 200 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப்படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை யாசிர் ஷா முறியடித்துள்ளார்.



    இந்திய அணியின் அஸ்வின் 37 போட்டியில் கைப்பற்றி 3-வது இடத்தையும், 38 போட்டியில் கைப்பற்றி லில்லீ, வக்கார் யூனிஸ் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
    நியூசிலாந்துக்கு எதிரான 3 மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அபு தாபியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பரபரப்பாக ஆட்டத்தில் நியூசிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

    துபாயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 184 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுக்கள் அள்ளினார்.



    இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்த டெஸ்டில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.



    3-வது போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. முகமது ஹபீஸ், 2. இமாம்-உல்-ஹக், 3. அசார் அலி, 4. அசாத் அலி, 5. ஹரிஸ் சோஹைல், 6. பாபர் ஆசம், 7. சாத் அலி, 8. சர்பிராஸ் அகமது, 9. யாசிர் ஷா, 10, பிலால் ஆசிப், 11. முகமது அப்பாஸ், 12. ஹசன் அலி, 13. பஹீம் அஷ்ரப், 14. ஷஹீன் அப்ரிடி, 15. மிர் ஹம்சா.
    அபு தாபியில் நடைபெற்று வந்த பரபரப்பான முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 171-ல் ஆல்அவுட்டாக்கி நியூசிலாந்து 4 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் அபு தாபியில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 153 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 227 ரன்கள் சேர்த்தது.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹசன் அலி, யாசிர் ஷா தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த நியூசிலாந்து 249 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது. இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று மேலும் 11 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது பாகிஸ்தான்.


    சோதி

    4-வது விக்கெட்டுக்கு அசார் அலி உடன் அசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. அசாத் ஷபிக் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 155 ரன்னிற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது பாகிஸ்தான்.

    ஒருபக்கம் விக்கெட் வீழந்தாலும் மறுமுனையில் அசார் அலி அரைசதம் அடித்து வெற்றிக்காக போராடினார். வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில் 9-வது விக்கெட்டுக்கு வந்த ஹசன் அலி ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் 164 ரன்கள் எடுத்திருந்தது.


    அசார் அலி - அசாத் ஷபிக்

    வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி விக்கெட்டுக்க அசார் அலி உடன் முகமது அப்பாஸ் ஜோடி சேர்ந்தார். அப்பாஸை எதிர்முனையில் வைத்துக் கொண்டு அசார் அலி ஒவ்வொரு ரன்னாக எடுத்தார். 11 ஓவர்கள் தாக்குப்பிடித்து 7 ரன்கள் எடுத்தார் அசார் அலி. இறுதியில் 65 ரன்கள் எடுத்த நிலையில் பட்டேல் பந்தில் எல்பிடபிள்யூ ஆக பாகிஸ்தான் 171 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் பரபரப்பாக சென்ற டெஸ்டில் நியூசிலாந்து 4 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. பட்டேல் சிறப்பாக பந்து வீசி ஐந்துவிக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
    பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டது. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் அபுதாயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ராவல், லாதம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராவல் 7 ரன்னிலும், லாதம் 13 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.


    கேன் வில்லியம்சன்

    அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுக்கள் சரிந்து கொண்டே இருந்தது. கேன் வில்லியம்சன் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 66.3 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.


    முகமது அப்பாஸ்

    பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 3 விக்கெட்டும் முகமது அப்பாஸ், ஹசன் அலி, ஹரிஸ் சோஹைல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்த யாசிர் ஷா விரும்புகிறார். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை துபாயில் தொடங்குகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் 2-0 என வெற்றி பெற்றது. தொடரை வெல்வதற்கு யாசிர் ஷா, ஜூல்பிகர் பாபர் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணமாக இருந்தார். இருவரும் இணைந்து 26 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இந்த முறை தான் மட்டும் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்த விரும்புவதாக யாசிர் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து யாசிர் ஷா கூறுகையில் ‘‘நான் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்த திட்டமிட்டுள்ளேன். விக்கெட் வீழ்த்துவது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். இதனால் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதால் இலக்கு நிர்ணயித்துள்ளது.



    உலகத்தரம் வாய்ந்த வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியில் இல்லை. என்றாலும் நாங்கள் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். பிக் பாஷ் தொடரில் சில வீரர்களுடன் நான் விளையாடியுள்ளேன். இதனால் அவர்களின் பலன் மற்றம் பலவீனம் எனக்குத் தெரியும்’’ என்றார்.
    ×