என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி - ஜெய்ப்பூரை வீழ்த்தியது பாட்னா பைரேட்ஸ் அணி
Byமாலை மலர்12 Sep 2019 4:47 PM GMT (Updated: 12 Sep 2019 4:47 PM GMT)
கொல்கத்தாவில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணியை 36 -33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது பாட்னா பைரேட்ஸ் அணி.
கொல்கத்தா:
புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் பொறுப்புடன் விளையாடின. இதனால் முதல் பாதி முடிவில் 15- 14 என ஜெய்ப்பூர் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.
ஆனால், இரண்டாவது பாதியில் பாட்னா பைரேட்ஸ் அணியினர் சிறப்பாக ஆடினர். இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணி 36 - 33 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் ஒன்பதாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த போட்டியில் நூலிழையில் தோற்றாலும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
பரபரப்பாக நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை 42-40 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது பெங்கால் வாரியர்ஸ் அணி.
Next Story
×