search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி 2019
    X
    புரோ கபடி 2019

    புரோ கபடி ‘லீக்’ போட்டி - பெங்களூர் அணிக்கு இன்று பெங்கால் பதிலடி கொடுக்குமா?

    புரோ கபடி லிக் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தீபக் ஹூடா தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பர்தீப் நர்வால் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
    கொல்கத்தா:

    7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 8-வது கட்ட ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

    இந்தப்போட்டியில் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 22 ஆட்டம் இருக்கும். ‘லீக்’ முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு நுழையும்.

    முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தீபக் ஹூடா தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பர்தீப் நர்வால் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஜெய்ப்பூர் அணி 7 வெற்றி, 6 தோல்வி, ஒரு டையுடன் 41 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஏற்கனவே பாட்னாவை வீழ்த்தி இருந்தது. இதனால் மீண்டும் தோற்கடித்து 8-வது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னேறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    ஜெய்ப்பூர் அணியில் கேப்டன் தீபக் ஹூடா (102 புள்ளி), சந்தீப்குமார் துல் (49 புள்ளி) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    பாட்னா பைரேட்ஸ் 4 வெற்றி, 10 தோல்வியுடன் 25 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணிஜெய்ப்பூருக்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    பாட்னா அணியின் கேப்டன் பர்தீப் நர்வால் 158 ரைடு புள்ளிகள் எடுத்து இந்த சீசனில் 3-வது இடத்தில் உள்ளார். ஒட்டு மொத்த புரோ கபடி போட்டியில் 1000 ரைடு புள்ளிகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையில் அவர் உள்ளார்.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டம் மனீந்தர்சிங் தலைமையிலான பெங்கால் வாரியர்ஸ்- ரோகித்குமார் தலைமையிலான பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    பெங்கால் வாரியர்ஸ் 8 வெற்றி, 4 தோல்வி, 3 டையுடன் 53 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஏற்கனவே பெங்களூரிடம் 1 புள்ளியில் தோற்று இருந்தது. இதற்கு பதிலடி கொடுத்து 9-வது வெற்றி ஆர்வத்தில் பெங்கால் உள்ளது.

    அந்த அணியில் கேப்டன் மனீந்தர் சிங் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 121 ரைடு புள்ளி எடுத்துள்ளார். இதுதவிர முகமது இஸ்மாயில் நபிபக்‌ஷர், பிரபஞ்சன், சுகேஷ் ஹெக்டே, பல்தேவ் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    பெங்களூர் அணி 9 வெற்றி, 6 தோல்வியுடன் 48 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி பெங்காலை மீண்டும் வீழ்த்தி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக பவன் குமார் ஷெரவாத் இருக்கிறார். அவர் 187 புள்ளிகள் பெற்று இந்த சீசனில் முதல் இடத்தில் உள்ளார். இதுதவிர கேப்டன் ரோகித்குமார், மகேந்தர்சிங் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
    Next Story
    ×