என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் விளையாட்டு வீராங்கனை - பத்மவிபூஷன் விருதுக்கு மேரிகோம் பெயர் பரிந்துரை
Byமாலை மலர்12 Sep 2019 6:55 AM GMT (Updated: 12 Sep 2019 6:55 AM GMT)
2020-ம் ஆண்டுக்கான பத்மவிபூஷன் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரும் பத்மபூஷன் விருத்துக்கு பிவி சிந்து பெயரும் மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி:
நாட்டில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அதற்கு அடுத்தப்படியாக பத்ம விபூஷன் விருது வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் 2020-ம் ஆண்டுக்கான பத்மவிபூஷன் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் விளையாட்டு வீராங்கனை ஆவார்.
மேரிகோம் ஏற்கனவே பத்மபூஷன் விருதை 2013-ம் ஆண்டும், பத்மஸ்ரீ விருதை 2006-ம் ஆண்டும் பெற்று இருந்தார்.
பத்மவிபூஷன் விருதை பெற இருக்கும் 4-வது விளையாட்டு நபர் என்ற பெருமையை மேரிகோம் பெறுவார்.
2007-ம் ஆண்டு செஸ் வீரர் விஸ்வநாத ஆனந்தும், 2008-ம் ஆண்டு கிரிக்கெட் சகாப்தம் தெண்டுல்கரும், மலையேறும் வீரர் எட்மண்டு ஹிலாரியும் (நியூசிலாந்து) பத்மவிபூஷன் விருதை பெற்றிருந்தனர்.
36 வயதான மேரிகோம் 6 முறை உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார். 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலபதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.
2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டு மேரிகோமை பாராளுமன்ற மேல்சபைக்கு நியமன எம்.பி.யாக பா.ஜனதா அரசு நியமித்தது.
உலக பேட்மிண்டன் போட்டியில் சமீபத்தில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்த பி.வி.சிந்து பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது நாட்டில் வழங்கப்படும் 3-வது உயரிய விருது ஆகும்.
2017-ம் ஆண்டு அவர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் இறுதிப்பட்டியலில் அவர் இடம்பெற முடியாமல் போனது. 2015-ம் ஆண்டு பி.வி.சிந்து பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு வினிஷ்போகத் (மல்யுத்தம்), ஹர்மன்பிரீத் கவூர் (கிரிக்கெட்) ரணிராம்பால் (ஆக்கி), சுமாஷிரு (துப்பாக்கி சுடுதல்), மணிக்கா பத்ரா (டேபிள் டென்னிஸ்), தஷி மற்றும் நுங்ஷி மாலிக் (மலையேறுதல்) ஆகிய 7 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மத்திய விளையாட்டு அமைச்சகம் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 9 பேரும் வீராங்கனைகள் ஆவார்.
பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் இறுதி பெயர் விவரங்களை ஜனவரி 25-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கும்.

Next Story
×