search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி
    X
    எம்எஸ் டோனி

    தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: எம்எஸ் டோனிக்கு இடமில்லை

    தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எம்எஸ் டோனிக்கு இடம் கிடைக்கவில்லை. ஹர்திக் பாண்டியா இடம் பிடித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 15-ந்தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எம்எஸ் டோனிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து குணமடைந்த ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளதால் அதே அணிதான் தென்ஆப்பிரிக்கா தொடரிலும் களம் இறங்குகிறது (புவிக்கு பதில் ஹர்திக் பாண்டியா).

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. தவான், 4. கேஎல் ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த், 8. ஹர்திக் பாண்டியா, 9. ஜடேஜா, 10. குருணால் பாண்டியா, 11. வாஷிங்டன் சுந்தர், 12. ராகுல் சாஹர், 13. கலீல் அகமது, 14. தீபக் சாஹர், 15. நவ்தீப் சைனி.
    Next Story
    ×