என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிகுவா டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் பும்ரா புதிய சாதனை
Byமாலை மலர்24 Aug 2019 12:00 PM GMT (Updated: 24 Aug 2019 12:00 PM GMT)
டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்தார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்கள் அனைவரும் கை கொடுக்காத நிலையில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 297 ரன்களை எட்டியது.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சில் நிலை குலைந்து 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தேநீர் இடைவேளை முடிந்த பின், பிராவோவை எல்பிடபிள்யு முறையில் பும்ரா வெளியேற்றினார். பிராவோ 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டை வீழ்த்தியபோது, டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளை வீசி (2465 பந்துகள்) 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை பும்ரா படைத்தார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பும்ரா. 11 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார் .
அவருக்கு அடுத்த இடங்களில் வெங்கடேஷ் பிரசாத், ஷமி (13 போட்டிகள்), இர்பான் பதான், ஸ்ரீசாந்த் (14 போட்டிகள்) , காவ்ரி, கபில்தேவ் (16 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
அதேபோல. ஒட்டுமொத்த இந்திய பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அஸ்வின் 9 போட்டிகளிலும், அனில் கும்ப்ளே 10 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
பும்ராவுக்கு அடுத்தபடியாக, அஸ்வின் 2597 பந்துகளில் 50 விக்கெட்டுகளை சாய்த்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
பும்ரா தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். ஆனால் டெஸ்ட் போட்டிக்கான வரிசையில் 16-வது இடத்தில் உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X