search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாயிண்ட் எடுக்க போராடும் பாட்னா பைரேட்ஸ் அணி
    X
    பாயிண்ட் எடுக்க போராடும் பாட்னா பைரேட்ஸ் அணி

    புரோ கபடி - பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்

    சென்னையில் இன்று நடந்த புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ் அணி.
    சென்னை:

    புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பெங்கால் வாரியர்ஸ் அணி அபாரமாக ஆடியது. பாட்னா பைரேட்ஸ் அணியும் கடுமையாக போராடியது. இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் 35 - 26 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் பெங்கால் வாரியர்ஸ் அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.
    Next Story
    ×