search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவுன்சர் பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்
    X
    பவுன்சர் பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்

    பவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ

    பேட்ஸ்மேன் ஒருவர் பவுன்சர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் ஹெல்மேட் அணிந்த தலையால் முட்டித்தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.
    பேட்ஸ்மேன் ஒருவர் பவுன்சர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் ஹெல்மேட் அணிந்த தலையால் முட்டித்தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

    கிரிக்கெட்டில் கடந்த ஒரு வாரமாக விவாதப் பொருளாக இருப்பது ஜாப்ரா ஆர்சர் பந்தில் ஸ்மித் அடிபட்டதுதான். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆர்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் கழுத்துப் பகுதியை தாக்கியது. இதனால் கான்குசன் மூலம் வெளியேறினார். அவருக்குப் பதிலாக மார்னஸ் லாபஸ்சாக்னே களம் இறங்கினார். இவரும் ஆர்சர் பந்தில் அடி வாங்கினார்.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆர்சர் பந்தை எதிர் கொள்வது எப்படி என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில்தான் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் பவுன்சர் பந்தை பேட்ஸ்மேன் ஒருவர் எதிர்கொண்ட விதம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    லெய்செஸ்டர் அணிக்காக  விளையாடி வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துர்காம் அணி வேகப்பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்டார்.

    பேட்ஸ்மேன் பெரும்பாலும் பவுன்சர் பந்தை புல்ஷாட், குக் ஷாட் மூலம் எதிர்கொள்வார்கள. அல்லது குனிந்து பந்தை லீவ் செய்வார்கள். ஆனால், மார்க் கோஸ்குரோவ் பந்தை ஹெல்மெட் அணிந்த தலையால் முட்டி ஸ்லிப் திசைக்கு அனுப்பினார்.

    கால்பந்து வீரர்கள் ஹெட்டால் முட்டி கோல் அடிப்பதுபோல் இந்த காட்சி இருந்தது. இந்த வீடியோவை பதிவிட்ட கெவின் பீட்டர்சன் ‘‘ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஜாப்ரா பந்தை எப்படி எதிர்கொள்வது!...’’ என்று எழுதியுள்ளார்.
    Next Story
    ×