search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்மர்
    X
    நெய்மர்

    நெய்மரை லோனில் வாங்கும் வாய்ப்பை தவறவிட்டது மான்செஸ்டர் யுனைடெட்

    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் நெய்மரை லோனில் கொடுக்க தயாராக இருந்த நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் அந்த வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
    பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர் பார்சிலோனா அணியில் இருந்து மிகப்பெரிய தொகைக்கு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறினார். கடந்த இரண்டு வருடங்களாக அந்த அணிக்கு விளையாடிய நெய்மர் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்ப விரும்புகிறார்.

    ஆனால் பார்சிலோனா பெரும் தொகையை தந்தால்தான் நெய்மரை விடுவிப்போம் என பிஎஸ்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதனால் வேறு எந்த அணிக்காவது நெய்மரை கொடுத்து விடலாம் என்று பிஎஸ்ஜி விரும்புகிறது. இதனால் மான்செஸ்டர் அணியிடம் லோனுக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்ற பிஎஸ்ஜி தூதுவிட்டது. அந்த வாய்ப்பை மான்செஸ்டர் யுனைடெட் தவற விட்டதாக கூறப்படுகிறது.

    தற்போது ரியல் மாட்ரிட் மற்றும் யுவான்டஸ் அணிகள் அவரை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×