என் மலர்

  செய்திகள்

  கவுதம் கம்பீர் - சாகித் அப்ரிடி
  X
  கவுதம் கம்பீர் - சாகித் அப்ரிடி

  காஷ்மீர் விவகாரம்: மோதிய அப்ரிடி, கவுதம் கம்பீர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வீரர் அப்ரிடி எழுப்பிய கேள்விக்கு இந்திய வீரரான கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
  புது டெல்லி:

  காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை லடாக், காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

  இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

  மாநிலங்களவையிலும் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.  பாகிஸ்தானும் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

  இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.  இதில், ‘ஐநா அளித்த உறுதியின்படி காஷ்மீருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். சுதந்திர உரிமை என்பது அனைவருக்குமானது. ஐநா ஏன் உருவாக்கப்பட்டது? இப்போது அது ஏன் தூங்குகிறது?

  தூண்டப்படாத ஆக்கிரமிப்புகளும், குற்றங்களும் காஷ்மீரில் மனிதத்துக்கு எதிராக அரங்கேறுவது கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க பிரதமர் இதில் நடுநிலையாக செயல்பட வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.

  இதற்கு பதிலளித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர், ‘அப்ரிடி கண்டுபிடித்துவிட்டார். அங்கே ஆக்கிரமிப்பு எதுவும் தூண்டப்படவில்லை. இவைஅனைத்தும் குற்றச் செயல்களுக்கு எதிரான மனிதநேய நடவடிக்கை. இதற்காக இவர் இங்கு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை மறந்து இவர் பேசிக் கொண்டிருக்கிறார். கவலைப்பட வேண்டாம். சீக்கிரமே தீர்வு காணப்படும் மகனே’ என பதில் அளித்துள்ளார். 
  Next Story
  ×