search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுதம் கம்பீர்"

    • தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
    • ரவீந்திர ஜடேஜா அல்லது அஷ்வின் ஆகிய இருவரில் ஒருவர் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ளார்.

    இதில் அவர் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். அதற்கு அடுத்ததாக 3 முதல் 6 வரை சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

    இதையடுத்து ரவீந்திர ஜடேஜா அல்லது அஷ்வின் ஆகிய இருவரில் ஒருவர் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை கம்பீர் தேர்வு செய்துள்ளார்.

    கவுதம் கம்பீர் தேர்வு செய்துள்ள இந்தியாவின் பிளேயிங் லெவன்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா / ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    • கடினமாக உழைத்து வந்த நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு இன்னிங்சையும் முதல் இன்னிங்ஸ் போல் விளையாடுவீர்கள்.
    • அவர் எந்த வெற்றியைப் பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் டிஎல்எஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இளம் வீரர் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் அடித்து இந்தியா 180 ரன்கள் குவிக்க உதவினார்.

    இந்நிலையில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது என்று கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது. நீங்கள் முதல் தர கிரிக்கெட்டில் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக விளையாடி கடினமாக உழைத்து இந்தியாவுக்காக விளையாட வரும்போது உங்களின் ஒவ்வொரு இன்னிங்சுக்கும் தனி மதிப்பு இருக்கும்.

    அப்படி கடினமாக உழைத்து வந்த நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு இன்னிங்சையும் முதல் இன்னிங்ஸ் போல் விளையாடுவீர்கள். அந்த வகையில் விளையாடும் ரிங்கு சிங் எந்த வெற்றியைப் பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் எந்த வாய்ப்பையும் எளிதாக பெறவில்லை.

    என்று கம்பீர் கூறினார்.

    • 2011 உலகக் கோப்பையின்போது யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதினை வென்றார்.
    • உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்குவகித்த யுவராஜை பாராட்டாதது ஏன் என கம்பீர் கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி 1983-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. கபில்தேவ் தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.

    28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவரது தலைமையிலான அணி சொந்த மண்ணில் 2011-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது.

    இந்த உலகக் கோப்பையை வெல்ல யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார். இடதுகை அதிரடி பேட்ஸ்மேனான அவர் 362 ரன்கள் குவித்தார். மேலும் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி னார்.

    இந்நிலையில், 2011 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    2011 உலகக் கோப்பையின்போது யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதினை வென்றது எல்லோருக்கும் தெரியும். இதுகுறித்து எத்தனை பேர் பேசினார்கள்.

    யுவராஜ் சிங் குறித்து பேசாததற்கு காரணம் என்ன? அவரை விளம்பரப்படுத்திக் கொள்ள மக்கள் தொடர்பு குழுவினர் என தனியாக ஒன்று இல்லை என்பது காரணமாக இருக்கலாம்.

    நீங்கள் ஒருவரை பற்றி அதிகமாக பேசவில்லை என்றாலும், அவரை மக்களிடத்தில் அதிகம் கொண்டு செல்லவில்லை என்றாலும் அவர் அதிகமாக வெளியில் தெரியமாட்டார். அவருக்கு கிடைக்க வேண்டிய உரிய பாராட்டு கிடைக்காது. ஒருவரை மட்டுமே தொடர்ந்து மக்கள் முன் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தால் அவர் பிராண்டாக மாறிவிடுவார்.

    இந்த உலகக் கோப்பையில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. பேட்டிங்கை நம்பியுள்ள அணியாக இல்லாமல் பந்துவீச்சை மையப்படுத்தும் அணியாக மாறி உள்ளது.

    முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரின் கடினமாக உழைப்பு பாராட்டுகளுக்கு உரியதாகும் என தெரிவித்தார்.

    சமீபத்தில் நடந்த லெஜண்ட்ஸ் போட்டியின்போது காம்பீருக்கும், ஸ்ரீசாந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் யுவராஜ்சிங்குக்கு உரிய பாராட்டு கிடைக்கவில்லை என்று காம்பீர் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எலிமினேட்டர் சுற்றில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
    • இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    லெஜண்ட் லீக் கிரிக்கெட் தொடர் நவம்பர் 18-ந் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ், மனிபால் டைகர், குஜராத் ஜெயண்ட்ஸ், அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ், பில்வார கிங்ஸ் என்ற 6 அணிகள் பங்கேற்றது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

    இந்நிலையில் நேற்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது கவுதம் கம்பீர் தன்னை சூதாட்டவர் என்று கூறியதாக ஸ்ரீ சாந்த் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

    இது குறித்து ஸ்ரீசாந்த் பேசியதாவது:-

    போட்டி நடந்து கொண்டிருக்கும் போது கம்பீர் என்னை கூப்பிட்டு கொண்டே இருந்தார். நான் ஒரு கெட்ட வார்த்தை கூட உபயோகிக்கவில்லை. என்ன சொல்கிறாய்? என்ன சொல்கிறாய்? என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். சொல்லப்போனால், அவர் என்னை சூதாட்ட வீரர் சூதாட்ட வீரர் என்று சொல்லிக்கொண்டே இருந்ததால், கிண்டலாகச் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

    போட்டி நடந்து கொண்டிருந்த போது அவர் பயன்படுத்திய வார்த்தை இது. உண்மையில், நடுவர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயன்றபோது அவர் அதே வார்த்தையை பயன்படுத்தினார். உடனே நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் அவர் அதையே திரும்பத் திரும்பச் சொன்னார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2022-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அறிமுகமானது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கவுதம் கம்பீர் 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. பிசிசிஐ மூலமாக நடத்தப்படும் இந்த தொடரானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த 2022-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அறிமுகமானது. இந்த அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்தார். அணியில் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்தார்.

    இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலிருந்து கம்பீர் விலகினார். அவர் கேப்டனாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கவுதம் கம்பீர் 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் ஸ்ட்ரேடெஜி ஆலோசகராக பிசிசிஐயின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தான் கம்பீர் அந்த அணியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

    • கவுதம் கம்பீர் இன்று பகிர்ந்து இருக்கும் வீடியோவில் புதிய விளக்கம்.
    • உலகக் கோப்பை தொடருக்கு இது வித்தியாசமான விளம்பரம்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நேற்று (செப்டம்பர் 25) வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரல் ஆனதோடு, பரபரப்பையும் கிளப்பியது. வீடியோவில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், கடத்தப்படுவதை போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

    குழப்பத்திற்கு முடிவுக்கட்டும் வகையில், கவுதம் கம்பீர் இன்று பகிர்ந்து இருக்கும் வீடியோ அமைந்து உள்ளது. அதன்படி கவுதம் கம்பீர் நேற்று வெளியிட்ட வீடியோ ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விளம்பரம் என்று தெரியவந்துள்ளது.

    எவ்வித தகவலும் வழங்காமல், கவுதம் கம்பீர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது விளம்பரம் என்று தெரியவந்துள்ள நிலையில், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இது வித்தியாசமான விளம்பரமாகவும் மாறி இருக்கிறது.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்காக நாடு முழுக்க போட்டிகளை நடத்த பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    • இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 213 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 172 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 22 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு டோனிதான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டோனியால்தான் இன்று ரோகித் சர்மா ரோகித் சர்மாவாக உள்ளார். ரோகித்தின் கேரியரில் இந்த திருப்புமுனை ஒரே ஒரு மனிதனால் மட்டுமே சாத்தியமானது. அவர்தான்எம்எஸ் டோனி. ரோகித் வாழ்க்கையின் முதல் ஆறு ஆண்டுகள் கடினமான நேரத்தில் டோனி அவரை ஆதரித்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக களமிறங்குமாறு ரோகித்திடம் டோனி கேட்டு கொண்டார்.

    மிடில் ஆர்டர் பேட்டராக இருந்து தொடக்க ஆட்டக்காரராக மாறிய பிறகு ரோகித்தின் கேரியர் முற்றிலும் மாறிவிட்டது. இன்று அவர் எல்லா காலத்திலும் சிறந்த ஒயிட்-பால் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக போட்டியின் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்கும் திறமை அவரிடமும் இருக்கிறது.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மழைக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த முக்கியமான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலியை விட குல்தீப் யாதவ் தான் ஆட்டநாயகன் என்று கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    என்னை பொறுத்த வரை குல்தீப் யாதவ் ஆட்டநாயகன். மேலும் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சதமும் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் நல்ல ரன்களும் அடித்தார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் ஸ்விங் மற்றும் வேகத்துக்கு சாதகமான இது போன்ற மைதானங்களில் 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் எடுப்பது கடினமாகும். அதிலும் குறிப்பாக சுழலை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் வீசிய பவுலிங் தான் வெற்றியை மாற்றியது.

    அது தான் அவர் எந்தளவுக்கு தரமான பவுலர் என்பதையும் காட்டுகிறது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு காற்றில் சுழல வைத்து பெரிய சவாலை கொடுத்தார். அது உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நல்ல அம்சமாகும். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக போட்டியின் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்கும் திறமை அவரிடமும் இருக்கிறது.

    என்று கம்பீர் கூறினார். 

    • விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரில் யார் சிறந்தவர் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
    • கம்பீர் முற்றிலும் மாறுபட்ட பதிலை அளித்தார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர். இவர் தொடர்பாக அடிக்கடி செய்திகள் வருவது உண்டு. சில நாட்களுக்கு முன்னர் கூட ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பேட்டியில் யாரும் எதிர்ப்பார்க்க முடியாத வகையில் பதில் அளிப்பார்.

    அதுபோன்று தற்போது ஒரு பேட்டியில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரு பதிலை அளித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

    தி படா பாரத் ஷோவில் விவேக் பிந்த்ராவுடன் ஒரு நேர்காணலுக்காக கம்பீர் அமர்ந்திருந்தார். அவரிடம் இந்திய அணி இதுவரை தயாரித்த சிறந்த பேட்ஸ்மேன்கள் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கருத்து கேட்கப்பட்டது. மேலும், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர்களும் வழங்கப்பட்டன.

    இருப்பினும், கம்பீர் முற்றிலும் மாறுபட்ட பதிலை அளித்தார். அவர் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கை தனது பதிலாகக் குறிப்பிட்டார்.

    • மைதானத்தில் இருந்த ஒரு தரப்பு ரசிகர்கள் கோலி கோலி என்று வேகமாக கூச்சலிட்டு முழங்கினார்கள்.
    • விராட் கோலியை அடிக்கடி விமர்சிப்பதையும் களத்தில் சண்டை போடுவதையும் கௌதம் கம்பீர் வழக்கமாக வைத்திருக்கிறார்.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 4-ம் தேதி இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதிய போட்டியில் நட்சத்திர முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வர்னணையாளராக செயல்பட்டார். அப்போது மாலை நேரத்தில் மழை வந்து போட்டி நிறுத்தப்பட்டதால் பெவிலியன் நோக்கி போனில் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்த அவருடைய காதில் கேட்கும் அளவுக்கு மைதானத்தில் இருந்த ஒரு தரப்பு ரசிகர்கள் கோலி கோலி என்று வேகமாக கூச்சலிட்டு முழங்கினார்கள்.

    அதற்கு அந்த ரசிகர்களுக்கு எதிராக தம்முடைய நடுவிரலை காட்டி கௌதம் கம்பீர் கூலாக நடந்து சென்றது சமூக வலைதளங்களில் வைரலானது.

    விராட் கோலியை அடிக்கடி விமர்சிப்பதையும் களத்தில் சண்டை போடுவதையும் கௌதம் கம்பீர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதனால் டோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை பிடிக்காதவராகவே அறியப்படும் கம்பீர் அவர்களுடைய ரசிகர்களுக்கு எதிராக அப்படி செய்ததில் ஆச்சரியமில்லை என்று நினைத்து அனைவருமே அந்த வீடியோவை உண்மை என்று நம்பி நீங்கள் எல்லாம் ஒரு ஜாம்பவானா? என்று சரமாரியாக திட்டி தீர்த்தார்கள்.


    இந்த நிலையில் அந்த வீடியோ வைரலானதை பார்த்த கெளதம் கம்பீர் அது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ரசிகர்கள் காஷ்மீர் பிரச்சனையை இணைத்து பேசியதற்காக அவ்வாறு நடுவிரலை காண்பித்ததாக நேரடியாக உண்மையை விளக்கினார். குறிப்பாக தம்முடைய நாட்டுக்கு எதிராக யார் பேசினாலும் அவ்வாறுதான் ரியாக்சன் கொடுப்பேன் என்று தைரியமாக சொன்ன அவர் சமூக வலைதளங்களில் வந்தது உண்மையல்ல என தெளிவுபடுத்தினார்.


    ஆரம்பத்தில் வைரலான வீடியோவில் கௌதம் கம்பீர் வெள்ளை சட்டை அணிந்திருந்தார். ஆனால் இந்தியா மற்றும் நேபால் அணிகள் மோதிய போட்டியில் அவர் கருப்பு சட்டை அணிந்து வர்ணனை செய்தார். இங்கே உண்மை என்னவெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது வெள்ளை சட்டை அணிந்து பெவிலியன் நோக்கி சென்ற அவரிடம் பாகிஸ்தான் ரசிகர்கள் காஷ்மீர் சம்பந்தமாக ஏதோ கூச்சலிட்டதாக தெரிகிறது.

    அதற்கு தான் கம்பீர் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எதிராக இப்படி ஒரு ரியாக்சன் கொடுத்தது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் ஆரம்பத்தில் வைரலான வீடியோவில் உண்மையான ஆடியோவை நீக்கிய பாகிஸ்தான் ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மைதானத்தில் கௌதம் கம்பீருக்கு எதிராக கோலி, கோலி என கூச்சலிட்ட இந்திய ரசிகர்களின் ஆடியோவை சேர்த்து எடிட்டிங் செய்து அவரை விராட் கோலி ரசிகர்களிடம் வில்லனாக காட்டியதும் அம்பலமாகியுள்ளது.

    • ஒருவர் வலதுகை பேட்ஸ்மேனா அல்லது இடக்கை பேட்ஸ்மேனா என்பது முக்கியமே அல்ல.
    • மூன்று இடக்கை ஆட்டக்காரர்கள் வேண்டும் என்ற விவாதம் முற்றிலும் பயனற்ற ஒரு சிந்தனை.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டாப்-7 பேட்மேன்களில் குறைந்தது 3 இடக்கை ஆட்டக்காரர்கள் இடம் பெற வேண்டியது அவசியம் என்று சமீபத்தில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.

    ரவி சாஸ்திரியின் யோசனைக்கு இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கம்பீர் கூறுகையில், 'ஒருவர் வலதுகை பேட்ஸ்மேனா அல்லது இடக்கை பேட்ஸ்மேனா என்பது முக்கியமே அல்ல. மூன்று இடக்கை ஆட்டக்காரர்கள் வேண்டும் என்ற விவாதம் முற்றிலும் பயனற்ற ஒரு சிந்தனை. நீங்கள் விளையாடுபவர்களின் தரத்தை தான் பார்க்க வேண்டும். ஒரு நல்ல வீரர் இடக்கை அல்லது வலக்கை எதுவாக இருந்தாலும் எல்லா சூழலிலும் சிறப்பாக ஆடுவார்.' என்றார்.

    • இது ஓரளவு நல்ல அணியாகும்.
    • என்னை பொறுத்த வரை இது நன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியாகவே பார்க்கிறேன்.

    ஆசிய கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷிவம் துபேவை அணியில் சேர்த்திருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இது ஓரளவு நல்ல அணியாகும். என்னை பொறுத்த வரை இது நன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியாகவே பார்க்கிறேன். ஆனால் இதில் ஒரு லெக் ஸ்பின்னர் இருந்திருக்க வேண்டும்.

    ஏனெனில் தற்சமயத்தில் இது அதிக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள அணியாக தெரிகிறது. எனவே அதில் நீங்கள் ரவி பிஷ்னோய் அல்லது சஹாலை தேர்வு செய்திருக்கலாம். தற்போது பிரசித் கிருஷ்ணா இருக்கும் பார்முக்கு நீங்கள் முகமது ஷமியை வெளியேற்றி விட்டு ஏதேனும் ஒரு லெக் ஸ்பின்னரை தேர்வு செய்திருக்கலாம்.

    மேலும், அதே போல ஷிவம் துபே இருக்கும் பார்முக்கு அவரையும் நீங்கள் கணக்கில் எடுத்திருக்கலாம். ஏனெனில் நீங்கள் ஏதோ ஒரு வகையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பேக்-அப் வீரரை வைத்திருக்க வேண்டும். தற்போதுள்ள ஷர்துல் தாக்கூர் ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த வகையிலும் பேக்-அப் வீரராக இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×