search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்
    X
    டிஎன்பிஎல் கிரிக்கெட்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை-திருச்சி அணிகள் இன்று மோதல்

    டிஎன்பிஎல் போட்டியின் 16-வது ‘லீக்‘ ஆட்டம் நத்தத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திண்டுக்கல்:

    4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானம் ஆகிய 2 இடங்களில் நடை பெற்று வருகிறது.

    நெல்லையில் நேற்று நடந்த ஆட்டத்தில் வி.பி. காஞ்சி வீரன்ஸ் 58 ரன் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்சை வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய காஞ்சி வீரன்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. கேப்டன் அபராஜித் 48 பந்தில் 76 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), சித்தார்த் 38 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஆர். சதீஷ் 19 பந்தில் 47 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்க முடிந்தது. செந்தில்நாதன் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார். கவுதம் 3 விக்கெட்டும், ஆர்.சதீஷ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    காஞ்சி வீரன்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. சேப்பாக் சூப்பர் கில்லீசை விட அதிக ரன் இருந்ததால் 2-வது இடத்தை பிடித்தது.

    டி.என்.பி.எல். போட்டியின் 16-வது ‘லீக்‘ ஆட்டம் நத்தத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மதுரை அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி டூட்டி பேட்ரியாட்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. திண்டுக்கல் டிராகன்சிடம் 30 ரன்னிலும், காஞ்சி வீரன்சிடம் 7 விக்கெட்டிலும் தோற்று இருந்தது. திருச்சி அணியை வீழ்த்தி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    திருச்சி வாரியர்ஸ் அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்று இருந்தது. காரைக்குடி காளையிடம் சூப்பர் ஓவரிலும், சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 41 ரன் வித்தியாசத்திலும், கோவை கிங்சிடம் 26 ரன்னிலும் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    Next Story
    ×