என் மலர்

  செய்திகள்

  இந்திய வீரர்களுடன் விராட் கோலி
  X
  இந்திய வீரர்களுடன் விராட் கோலி

  உடை மாற்றும் ஓய்வு அறையின் சூழலில் நிம்மதியாக இருக்கலாம் -கோலி கூறுவது என்ன?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, உடை மாற்றும் அறையின் சூழலில் நிம்மதியாக இருக்கிறேன் என கூறியுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரை இறுதி சுற்றுடன் வெளியேறியது. அதன் பின்னர் இந்திய அணியில் பல வீரர்கள் ரசிகர்களாலும், முன்னாள் வீரர்களாலும் வெகுவாக விமர்சிக்கப்பட்டனர்.

  இதையடுத்து வரும் ஆகஸ்ட் 3ம்தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடக்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  இளம் வீரர்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை மிகவும் வியப்பாக உள்ளது. நாங்கள் சிறுவயதில் இருக்கும்போது இதுபோன்ற வீரர்கள் பாதிக்கூட இல்லை.

  விராட் கோலி -ஹர்திக் பாண்டியா

  ஆனால், இப்போது வரும் இளம் வீரர்கள் வயதையும் மீறி முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிறார்கள். ஐபிஎல் போன்ற போட்டிகள் இதற்கு முக்கிய பங்காற்றுகின்றன. தங்கள் தவறுகளை உடனடியாக சரிசெய்து கொள்கிறார்கள்.

  தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். அதேசமயம், நாட்டிற்காக விளையாடுகிறோம் என்பதை புரிந்துக் கொண்டு விளையாட வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளது.

  இந்த தொடர் மிக முக்கியமானது. மற்றவர்களை திட்டும் பணி உடை மாற்றும் ஓய்வு அறையில் இருப்பதில்லை. நிம்மதியாக இருக்கலாம். அங்குதான் குல்தீப்புடன் எப்படி இருக்கிறேனோ, அதேபோலவே டோனியுடனும் நட்பாக இருக்க முடியும். யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமென்றாலும் மற்ற வீரர்களுடன் பேசலாம். 
  Next Story
  ×