search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷிடேனின் ஷிடேன் கரேத் பேலே
    X
    ஷிடேனின் ஷிடேன் கரேத் பேலே

    கரேத் பேலேவுக்கு வாரத்திற்கு 3.5 லட்சம் யூரோ சம்பளம் கொடுக்க விருப்பம் தெரிவித்த சீன கிளப்

    ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் வேல்ஸ் நாட்டின் கால்பந்து வீரரான கரேத் பேலேவுக்கு வாரத்திற்கு 3.5 லட்சம் யூரோ சம்பளம் கொடுக்க சீன கிளப் முன்வந்துள்ளது.
    வேல்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரரான கரேத் பேலே கடந்ம 2013-ல் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய காலத்தில் 30 வயதாகும் இவருக்கு  மிகப்பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறிய பின்னர், கரேத் பேலே முன்னணி ஸ்டிரைக்கராக விளையாடினார். இருந்தாலும் கடந்த சீசனில் ரியல் மாட்ரிட்டின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. இதனால் ஷிடேனின் ஷிடேனை மீண்டும் பயிற்சியாளராக நியமித்தது ரியல் மாட்ரிட்.

    பேயர்ன் முனிச் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் தோல்வியடைந்தது. இந்த போட்டிக்குப்பின் ரியல் மாட்ரிட் கரேத் பேலேவை வெளியேற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறது என்று ஷிடேன் தெரிவித்திருந்தார்.

    இதற்கு ‘‘சிறந்த வீரரான கரேத் பேலேவை ஷிடேன் அவமதித்து விட்டார்’’ என்ற பேலேவின் ஏஜென்ட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஷென்குவா கால்பந்து கிளப் கரேத் பேலேவுக்கு வாரம் மூன்றரை லட்சம் யூரோ சம்பளமாக கொடுக்க தயராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

    கரேத் பேலே

    மேலும், ஜியாங்சு சுனிங், பீஜிங் குயோஆன் அணிகளும் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், டிரான்ஸ்பர் பீஸ் கொடுக்க அந்த அணிகள் ஆர்வம் காட்டவில்லை.

    ரியல் மாட்ரிட் உடனான கரேத் பேலேயின்  ஒப்பந்தம் 2022 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சீனா கிளப்பிற்கு ப்ரீ டிரான்ஸ்பரில் செல்வாரா? என்பது சந்தேகமே.
    Next Story
    ×